❓ வயல்களில் நாற்றுகள் நன்றாக வளர்வதற்கு என்னென்ன இயற்கை உரங்கள் போடலாம்?
🌱 டிரைக்கோடெர்மா அல்லது சு+டோமோனஸ் மற்றும் பீஜாமிர்தம் கரைசல் கொண்டு விதை நேர்த்தி செய்த பின் விதைக்கலாம்.
🌱 ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் சு+டோமோனஸ் கலந்து செடியின் மீது தௌpக்கலாம்.
🌱 பிரம்மாஸ்திரம் கரைசலைத் தௌpக்கலாம் அல்லது வேப்பங்கொட்டைச் சாற்றைத் தௌpக்கலாம். இவற்றைத் தௌpப்பதன் மூலம் வயல்களில் நாற்றுகள் பு+ச்சி தாக்குதலின்றி நன்றாக வளரும்.
❓ தென்னை மரத்தின் மட்டைகளில் சிறிய ஓட்டைகள் உள்ளது. மேலும் பாளைகள் அனைத்தும் உதிர்ந்து விடுகின்றன. அதற்கு என்ன செய்யலாம்?
🌴 நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் வேர்களுக்கு அருகில் சணப்பை அல்லது பசுந்தாள் பயிர்களை வளர்த்து மடக்கி விட வேண்டும்.
🌴 ஒரு மரத்துக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது வேப்பங்கொட்டை தூள் இட வேண்டும். இதனால் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.
🌴 மேலும் தென்னை மரத்திற்கு மண்புழு உரம், தொழு உரம் போட்டு மண் அணைத்து விடுவதன் மூலம் நல்ல மகசு+லைப் பெறலாம்.
❓ விதை இல்லாமல் தாவரத்தண்டு மூலம் பயிர்பெருக்கம் செய்யலாமா?
🎍 ஒரு தாவரத்தண்டுகள் மற்றும் குமிழ்கள் போன்ற திருந்திய தண்டுகளிலிருந்து நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்யலாம்.
🎍 இம்முறையில் திராட்சை, மாதுளை போன்ற பயிர்களை நடவு செய்யலாம்.
❓ கற்பு+ரக் கரைசலை தௌpப்பதால் பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
🍶 நெல் பயிரில் புகையான் உட்பட அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தலாம். அதேபோல் வாழை, காய்கறி பயிர்களில் ஆரம்பத்திலேயே தௌpத்தால் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
🍶 முருங்கைக்கு கொடுப்பதால் 20 நாட்களில் காய் பறிக்கலாம். எள் பயிருக்கு 2-3 முறை கொடுப்பதால் செடிகள் நன்றாக, உயரமாக வளரும். பு+க்களும் அதிகம் பிடிக்கும்.
🍶 எலுமிச்சை மற்றும் மல்லிகையில் இக்கரைசலைப் பயன்படுத்துவதால் தொடர்ச்சியாக பு+க்கள் மற்றும் காய்களை அறுவடை செய்யலாம்.
🍶 மிளகாய்க்கு ஆரம்பத்திலிருந்து கொடுப்பதால் முடக்கு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
🍶 வெங்காயத்தில் நுனி காய்கள் வராது. உளுந்து பயிரில் அளவுக்கு அதிகமான பு+க்கள் மற்றும் காய்கள் தோன்றும்.
❓ ஆடுகளுக்கு வேலிக் கருவை நெற்றுகளை எப்படி தீவனமாகக் கொடுக்கலாம்?
🐐 வேலிக் கருவை நெற்றுகளும் தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம். இந்நெற்றுகளை சேகரித்து வைத்து சிறிது சிறிதாகத் தீவனமாக அளிக்கலாம்.
🐐 இதில் 15 அல்லது 25 சதவிதம் சர்க்கரைப் பொருள் உள்ளதால் தினம் 100 அல்லது 200 கிராம் மட்டுமே கொடுக்க வேண்டும்.