என்னது...நாட்டுக்கோழிகளுக்கும் தடுப்பு மருந்துகள் உண்டா..?

 நாட்டுக்கோழிப் பண்ணைகளில் தடுப்பு+சிகளை கையாளும் விதம் !! 

👉 நாட்டுக்கோழிகளுக்கு பெருமளவில் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய தடுப்பு+சி மருந்துகளை கையாளும் விதம் பற்றி இங்கு காண்போம்.


🐓 கோழிகளுக்கு போட வேண்டிய தடுப்பு+சி மருந்துகளை குளிர்ந்த நிலையில் பண்ணைக்கு எடுத்து செல்ல வேண்டும்.


🐔 மருந்துகளை அதற்கான திரவத்தில் சரியாக கலப்பதற்கும், கலந்தபின் குறிப்பிட்ட நேரத்தில் செலுத்துவதற்கும் தகுந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


🐔 இத்தகைய தடுப்பு+சிகளை போடுவதற்கு கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வை மிகவும் அவசியமானது.


🐔 காலாவதியான தடுப்பு+சி மருந்துகளை உபயோகப்படுத்தக்கூடாது.


🐓 அனைத்து கோழிகளுக்கும் ஒரே நாளில் தடுப்பு+சி போட வேண்டும்.


🐓 பண்ணையில் நோய் தாக்கம் காணப்பட்டால் தடுப்பு+சி போடுவதை தவிர்க்க வேண்டும்.


🐓 தடுப்பு+சி போட வேண்டிய கோழிகள், ஏதாவது நோயினால் இறந்தாலோ, மெலிந்து போனாலோ தடுப்பு+சிகளை போடக்கூடாது.


🐔 தடுப்பு+சி போடும் போது கோழிகளுக்கு அயற்சி ஏற்படுத்தக்கூடிய எந்த செயல்களையும் செய்ய கூடாது.


🐓 எல்லாவிதமான மருந்துகளையும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.


🐓 தடுப்பு+சி போடும் போது தடுப்பு+சிகளை அதற்குரிய திரவத்தில் கலந்தபின் ஐஸ் கட்டிகளுக்கு இடையில் குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும்.


🐔 தடுப்பு+சிகளை போடும் போது தயாரிப்பாளர்களின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.


🐓 தடுப்பு+சி மருந்துகளை கலந்த பின் எந்த நிலையிலும் தாமதிக்காமல் செயல்பட வேண்டும்.


🐓 ஒரு மணி நேரத்தில் எத்தனை கோழிகளுக்கு தடுப்பு+சி போட இயலுமோ, அந்த அளவிற்கு மட்டும் தடுப்பு மருந்தை கலக்க வேண்டும்.


🐓 தடுப்பு+சி மருந்துகளை கோழிகளுக்கு கொடுத்த பின் அனைத்து மருந்து குப்பிகளையும் அழித்து விட வேண்டும்.


🐓 மீதமுள்ள கலக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.


🐔 தடுப்பு+சி போடும் போது எந்த வகை தடுப்பு+சி, எந்த நிறுவனம் தயாரித்தது, தொகுப்பு எண், தடுப்பு+சி போடப்பட்ட தேதி ஆகியவற்றை குறித்துக்கொள்ள வேண்டும்.


🐔 தடுப்பு+சிகளுக்கு பயன்படுத்தும் குடிநீரில் சிறிதளவு கூட கிருமிநாசினிகள் கலந்திருக்கக் கூடாது.