கால்நடைகளுக்கான மழைக்கால பாதுகாப்பு முறைகள்..!!
🐄 மழைக்காலத்தில் கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதல்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாக்கும் முறை பற்றி இங்கு காண்போம்.
🐄 மழைக்காலத்தின் போது கால்நடைகளுக்கான குடிநீர் மாசுபடாமலும், அதிக குளிர்ச்சியாக இல்லாமலும் இருக்க வேண்டும். அதேபோல் அதிக குளிர்ச்சியான நீரைப் பருகுவதால் வயிறு உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
🐄 அதுமட்டுமல்லாமல் மழை மற்றும் குளிர்காலங்களில் கால்நடைகளுக்குத் தக்க செரிமான சக்தி நிறைந்த உணவு அளிப்பது அவசியம். தரமான ஈரம் இல்லாத உலர் தீவனம் கொடுக்க வேண்டும், அதாவது வைக்கோலை உணவாக தரலாம்.
🐄 உலர் தீவனம் செரிக்கும்போது அதிக வெப்பம் வெளியாவதால் கால்நடைகள் தங்கள் உடல் வெப்பநிலையைச் சரிசெய்கிறது.
🐄 மழைச்சாரலால் அடர்தீவனங்களின் ஈரப்பதம் அதிகரித்து, பு+ஞ்சை தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தீவனங்களை ஈரமில்லாத பகுதியில் வைத்து பாதுகாத்து வழங்க வேண்டும்.
🐄 அதேபோல் கால்நடைகள் உள்ள கொட்டகையில் மழை நீர் புகாதவாறு அமைக்க வேண்டும். நீர் தேங்காத உயரமான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் அவசியம். நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க கொட்டிலில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.
🐄 இயற்கை முறை கிருமி நாசினி தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு ஒரு கிலோ வேக வைத்த சுண்ணாம்புக்கல்லை 10 லிட்டர் சுடு தண்ணீரில் போட்டு பின்பு நீர் தௌpந்தவுடன், 1 லிட்டர் அந்த சுண்ணாம்பு நீரை எடுத்து 50 கிராம் மஞ்சள் தூள் கலந்து கொட்டிலின் தரைப்பகுதியில் தௌpக்க வேண்டும்.
🐄 மேலும் மழைக்காலத்தில் ஈரம் மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக கன்றுகள் மற்றும் மாடுகளுக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மூட்டு வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைக் கட்டுப்படுத்த மாடுகள் மற்றும் கன்றுகள் படுப்பதற்கு ஈரம் இல்லாத வைக்கோல் அல்லது சாக்குப்பையைப் படுக்கையாக இடலாம்.
🐄 பனியிலோ மழையிலோ நனைந்த ஈரமான புற்களில் மாடுகளை மேய்க்கக் கூடாது. ஈரமான புற்களை மேய்வதால் வயிறு உப்பசம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
🐄 மேலும், ஈரமான புல்லின் நுனியில் குடற்புழுக்களை உண்டாக்கக்கூடிய காரணிகள் அதிகளவில் காணப்படும். எனவே, வெயில் வந்து ஈரம் புற்களிலுள்ள நீர் காய்ந்த பின்னரே மேய்க்க வேண்டும்.
🐄 அதேபோல் ஈரமான தரையில் நீண்ட நேரம் மேயும் கால்நடைகளுக்குக் கால் குளம்பில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு துளசி ஒரு கைப்பிடி, பு+ண்டு 4, குப்பைமேனி ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் 10 கிராம் ஆகியவற்றை அரைத்து 100 மில்லி லிட்டர் நல்லெண்ணையில் வதக்கி, குளிர்ந்தவுடன் குளம்பில் தடவ வேண்டும்.
🐄 மேலும் புண்களை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்பைக் கழுவி, ஈரத்தை துடைத்து பின்னர் மருந்தைத் தடவ வேண்டும். மழைக்காலத்தில் ஈ மற்றும் கொசுத் தொல்லைகளிலிருந்து விடுபட மாலை வேளையிலும், காலை வேளையிலும் மூட்டம் போடலாம்.
🐄 இதற்கு பச்சை மற்றும் பழுத்த வேப்பிலை, நொச்சியிலை, தும்பையிலை ஆகியவற்றை கொண்டு மூட்டம் போடுவதால், நல்ல பலன் கிடைக்கும்.