❓ கோரை புல் வராமல் தடுக்க பாலீதின் தாள்களை வயல்களில் உபயோகிக்கலாமா?
🌱 நிலத்தைப் பாலீதின் தாள்களைக் கொண்டு மூடுவதன் மூலம் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.
🌱 தாவர சருகுகள், இலைகளை கோரைகள் வளர்ந்துள்ள நிலத்தின் மேல் பரப்பி மண்ணை கொண்டுமூடுவதன் மூலம் கோரைகள் வளருவதைக் குறைக்கலாம்.
🌱 இயற்கைக் களைக்கொல்லியைப் பயன்படுத்தி கோரையைக் கட்டுப்படுத்தலாம்.
❓ மாமரத்தில் பு+ச்சிக்கட்டுப்பாடு மற்றும் காய்களைப் பழுக்க வைக்கும் இயற்கை முறை யாது?
🌳 வேப்ப எண்ணெய் தௌpப்பதன் மூலம் மாமரத்தில் தத்துப்பு+ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
🌳 மாந்தோப்பிற்குள் சு+ரியகாந்தியைப் பயிர் செய்தால் தேனீக்களை கவர்ந்து அதிக மகரந்தச்சேர்க்கை நடந்து மா மகசு+ல் அதிகரிக்கும்.
🌳 ஆவாரம் இலையை ஒரு அடுக்கு பரப்பி அதன் மீது மாங்காய்களை இட்டு பின் ஆவாரம் இலையைப் பரப்பினால் விரைவாக மாங்காய்கள் பழுக்கும்.
❓ ஏலக்காய் செடியில் தண்டுத்துளைப்பான் உள்ளது. அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்?
🍐 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தௌpப்பதன் மூலம் தண்டுத்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.
🍐 ஏலக்காய் தோட்டத்திற்கு விளக்குப் பொறிவைத்து தாய்ப்பு+ச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
❓ தட்டைப்பயிறு செடியில் அசுவினி தாக்கத்தைக் கட்டுப்படுத்த வழிமுறை கூறவும்?
🍪 இஞ்சி - 1 கிலோ, பு+ண்டு - 1 கிலோ, பச்சை மிளகாய் - 1 கிலோ மூன்றையும் தனித்தனியாக விழுதாக அரைத்து பின் கலந்து கொள்ள வேண்டும்.
🍪 தட்டைப்பயிறு செடிக்கு 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் விழுது எனக் கலந்து செடிகளில் தௌpக்கலாம்.
❓ சம்பங்கி செடி வைத்து சில மாதங்கள் ஆகிறது, ஆனால் சரியாக செடி வளரவில்லை. அதற்கு என்ன செய்வது?
🌼 செடியைச் சுற்றி களைக்கொத்தால் கிளறிவிட்டு மண்புழு உரம் மற்றும் மீன் அமிலம் கலந்து செடியைச் சுற்றிலும் வைக்க வேண்டும்.
🌼 சம்பங்கி செடிக்கு தேமோர் கரைசல் தௌpத்து விடுவதன் மூலம் பு+க்கள் அதிகமாக பு+க்கும்.