இதை மட்டும் செய்தால் போதும்... ஆடுகள் விரைவில் எடை கூடும்..!

 ❓ காட்டாமணக்கு தாவர இலை சாறு தயாரிக்கும் முறைகள் யாவை?

🍁 சுத்தமான காட்டாமணக்கு இலை மற்றும் தண்டை சுத்தமான நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்த எண்ணெய் பசையுடன்

கூடிய 5 கிலோ காட்டாமணக்கு சாறு கலவையை 5 லிட்டர் மாட்டு சிறுநீருடன் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.


🍁 அதன் பிறகு 3 - 4 மணி நேரம் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.


🍁 இந்த கலவையை நன்றாக (5 லிட்டர் அடர் கலவையாகும் வரை) கொதிக்க வைக்க வேண்டும். இந்த கரைசலை ஒரு துணியின் மூலம் வடிகட்டி அனைத்து வகையான செடிகளுக்கும் பு+ச்சிவிரட்டியாக தௌpக்கலாம்.


❓ கிராம்பு மரங்கள் திடீர் என காய்ந்து போவது எதனால்? அதற்கான தீர்வு என்ன?


🌲 கிராம்பு மரங்கள் திடீரென காய்ந்து போவதற்கு திடீர் மடிவு நோய் என்று பெயர். இந்நோய் கிராம்பு மரத்தினைத் தாக்கும் மிக முக்கியமான நோய் ஆகும். பாதிக்கப்பட்ட மரங்கள் திடீரென்று காய்ந்து விடும்.


🌲 நீண்ட காலத்திற்கு ஏற்படும் வறண்ட சு+ழ்நிலையும், மழையினால் ஏற்படும் நீர்த்தேக்க நிலையும் வேர்களை நலிவடையச் செய்வதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆகையால் அதிக நீர் தேங்காமலும், சரியான நேரத்தில் நீர் பாய்ச்சியும் பாதுகாக்கலாம்.


🌲 மலைப்பகுதி சரிவுகளில் சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது மிகுந்த பலன் தரும்.


❓ கோழிகளை தாக்கும் நாடாப்புழுக்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?


🐓 நாடாப்புழுக்கள் துண்டுதுண்டான நாடாக்கள் போன்ற பட்டையான நீளமுடைய புழுக்கள் ஆகும். இவை கோழிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.


🐓 இதனை கட்டுப்படுத்த கொட்டைப்பாக்கை (அரைப்பாக்கு) ஒரு கோழிக்கு ஒரு மாதங்களுக்கு ஒரு முறை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.


❓ அத்தி மரத்தின் இலை நுனியில் கருகி விடுகிறது. அதற்கு என்ன மருந்து தௌpக்கலாம்?


🌿 3 லிட்டர் தயிருடன் 5 கிலோ சாணம் சேர்த்து கலந்து 5 நாள் ஊறவைத்து அதன்பின் 12 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஏக்கருக்கு 10 டேங்க் தௌpத்தால் குருத்து கருகுதல் குறைக்கப்படும்.


❓ ஆட்டுக்கு உடல் எடை அதிகரிக்க என்னென்ன உணவு கொடுக்க வேண்டும்?


🐐 ஆடுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தும், தடுப்பு+சியும் போட வேண்டும்.


🐐 ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாய் சப்பைக்கான தடுப்பு+சி போட வேண்டும். தினமும் நான்கு மணி நேரம் மேய்ச்சலுக்கு விட வேண்டும்.


🐐 மாதம் ஐந்து கிலோ பருத்திக்கொட்டை புண்ணாக்கு தீவனமாக தர வேண்டும். இவற்றை பின்பற்றினால் ஆடுகள் விரைவில் எடை கூடும். சினை பிடிக்கும்.