பு+லோக கல்பதரு என்று அழைக்கப்படும் ஒரே மரம் பனை. எந்தவித பிரத்யேக பராமரிப்பு இல்லாமல் எளிதாக வளரக்கூடியது.
அனைத்து பாகங்களும் நமக்கு பயன் தரக்கூடியவை. நட்ட பத்து
முதல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு தான் பயன்தர ஆரம்பிக்கும். இவை உயரமாக வளர்வதால் இடி அதிகமாக தாக்கும். அதனால் மழை பெய்யும் நேரங்களில் பனை மரத்தின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.இதில் ஆண் மற்றும் பெண் என இருவகை உள்ளன. பு+மியை நோக்கி இவற்றின் நீளமான வேர்கள் செல்லும். அதனால் வறட்சியை தாங்கும் சக்தி உண்டு. அதேபோன்று இவற்றின் வேர்களுக்கும் மண்ணிற்கும் இடையே மழை நீர் ஆழமாக பு+மியில் சேமிக்கப்படுகிறது. ஆண் மரங்களில் இருந்து ஓலைகள், பதநீர், கள் முதலியவை கிடைக்கும். விரைவில் பருவத்திற்கு வருபவை ஆண் மரங்கள்.
பெண் மரங்களில் இருந்து ஓலை, நுங்கு, பனம்பழம் பெறப்படுகின்றன. பனங்கருப்பட்டி ஆண், பெண் ஆகிய இரு மரங்களில் இருந்தும் பெறப்படுகிறது.
பனைமரங்கள் இல்லை என்றால் தமிழ் இலக்கியம் நமக்கு கிடைத்து இருக்காது. அந்த காலத்தில் வெள்ளை காகிதங்களுக்கு பதிலாக பனை ஓலை சுவடிகள் பயன்படுத்தப்பட்டன.
அதிக அளவில் ஆக்சிஜன் வெளியிடக்கூடிய மரங்களில் பனையும் ஒன்று. அதனால் தான் ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் ஆட்சி செய்த போது பனை மரங்கள் வெட்ட தடை விதிக்கப்பட்டது. மீறினால் கடும் தண்டனை வழங்கப்பட்டது.
பனை மரங்களில் இருந்து இறக்கப்படும் கள் நல்ல சத்தானது. இதில் 6மூ ஆல்கஹhல் இருப்பதால் சிறிது போதை உண்டாகும். பனம்பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.
இயற்கை விவசாயத்தில் பனம்பழங்கள் ஓரளவு பங்களிக்கின்றன. மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசலில் இதை கலந்து ஆறு நாட்கள் கழித்து பயிர்களுக்கு பாய்ச்சும் போது வியக்கத்தக்க மாற்றம் காணலாம். மண்ணில் நுண்ணுயிர்கள் வேகமாக பரவும். பனை மரங்களில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் (ஓலை தவிர) கால்சியம் சத்து அதிகமாக உள்ளவை. நுங்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது.
பரண்மேல் ஆடு வளர்ப்பு முறையில் பரண் அமைக்க நன்கு வைரம் பாய்ந்த பனைமரங்கள் ரீப்பர்களாக அறுத்து பயன்படுத்தப்படுகின்றன. சிலர் வீடு கட்டவும் பயன்படுத்துகின்றனர். இதனால் பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும். பனைஓலை மட்டைகளில் இருந்து எடுக்கப்படும் நார், வீடுகட்ட பயன்படுத்தப்படுகிறது. பனை குருத்தோலை தோரணமாக பயன்படுத்தப்படுகிறது.
அதாவது வீட்டு விசேஷங்களுக்கு பனை ஓலைகள் தோரணமாக கட்ட காரணம் சில மரங்களின் இலைகள் மரத்தில் இருந்து வெட்டிய பின்பு கூட 24 மணி நேரம் வரை ஆக்சிஜனை வெளியிடும் ஆற்றல் கொண்டவை. அதில் முதன்மையானது பனை மர ஓலை.
அதாவது விஷேசங்களுக்கு மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது அவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் ஒரே இடத்தில் அதிகமாக தேவை. அதனால் தான் படிப்பறிவு இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
நோய் தாக்குதல் மிக குறைவு. சில சமயங்களில் காண்டாமிருக வண்டு குருத்துகளை தாக்கும். இதனால் பனை மரத்திற்கு பெரிய பிரச்சனை இல்லை. வேர்கள் பு+மியில் வெகு ஆழமாக செல்வதால் தண்ணீர் சேமிக்கப்படுவதுடன், மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.
அதாவது அழிந்து வரும் மரங்கள் பட்டியலில் இந்த பனைமரமும் சேர்ந்து உள்ளது. அனைத்து விவசாயிகளும் வீட்டிற்கு இரண்டு பனை மரங்களை வளர்ப்பதன் மூலம் இவற்றை அழிவில் இருந்து எளிதாக காப்பாற்றி விடலாம். அதேபோன்று ஆக்சிஜன் தொழிற்சாலைகளான பனை மரங்களை வளர்ப்பதன் மூலம் நம் சந்ததியினருக்கு தூய காற்றை நாம் விட்டு செல்கிறோம்.