பொங்கல், அவல் மற்றும் பொரி தயாரிப்பதற்கு மிகவும் ஏற்ற நெல் ரகம்..!
❓ சம்பங்கியில் மொட்டுத்துளைப்பானைத் தடுக்கும் வழிமுறைகள் யாவை?
🌼 கற்பு+ரகரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல்
இவை இரண்டையும் மாறி மாறி தௌpத்து வந்தால் சம்பங்கியில் மொட்டுத்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.❓ திறன் நுண்ணுயிர் கரைசல் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?
🍯 திறன் நுண்ணுயிர் கரைசல் தயாரிக்க மரம், செடி, கொடிகளின் வேர் பகுதி மண் அரை கிலோ (10-க்கும் மேற்பட்ட மரம், செடி), பரங்கிப்பழம் 2 கிலோ, பப்பாளிப்பழம் 2 கிலோ, வெல்லம் 1 கிலோ, நாட்டுக்கோழி முட்டை 2 அல்லது 3 மற்றும் தேவையான அளவு நீர் ஆகியவை தேவைப்படும்.
❓ வல்லாரைச் செடிகளில் பு+ச்சித்தாக்குதல் இருந்தால் எவ்வாறு கட்டுப்பாடுத்தலாம்?
🍀 வல்லாரைச் செடிகளின் இலைகளில் பு+ச்சித்தாக்குதல் இருந்தால் இஞ்சி, பு+ண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தௌpத்து கட்டுப்படுத்தலாம்.
🍀 இலைகள் பழுப்பு நிறத்தில் ஏதேனும் இருந்தால் அதற்கு கற்பு+ர கரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தௌpத்து குணப்படுத்தலாம்.
❓ அவல், பொரி தயாரிக்க உதவும் நெல் ரகம் எது?
🌾 நெற்பயிரில் எம்.டி.யு.-6 என்ற ரகம் பச்சரிசி பொங்கல், அவல் மற்றும் பொரி தயாரிப்பதற்கு மிகவும் ஏற்ற ரகமாகும்.
🌾 இந்த ரகம் 110 முதல் 115 நாட்களில் சராசரி மகசு+லாக எக்டேருக்கு 6,118 கிலோ தரவல்லது.
🌾 இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், பச்சை தத்துப்பு+ச்சி மற்றும் வெண் முதுகுப்பு+ச்சி ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.
❓ எனது மாடு கன்று ஈன்ற மாலையில் சீம்பால் நன்றாக கறந்தது காலையில் சிவப்பு நிறத்தில் கறக்கிறது என்ன காரணம் இதற்கு தீர்வு கூறுங்கள்.?
🐃 பொதுவாக பால் கறக்கு போது எல்லா விரல்களாலும் காம்பைப் பிடித்து உள்ளங்கையில் அழுத்தி பால் கறக்க வேண்டும்.
🐃 இம்மாதிரி கறந்தால் கன்று சுவைவது போன்று அழுத்தம் காம்பின் எல்லா பாகங்களிலும் ஒரே அளவாக ஏற்படும்.
🐃 இதனால் பால் கிண்ணத்தில் காயமோ இரத்தக் கசிவோ ஏற்படாது. பெருவிரலை மடித்து அழுத்தி பால் கறக்க கூடாது.
🐃 பெருவிரல் கொடுக்கும் அழுத்தம் காம்பு கிண்ணத்தைக் காயப்படுத்தி விடும். இதனால் மயிரிழை போன்ற இரத்தக் குழாய்கள் வெடிப்பதால் இரத்தம் கசியும் இதானல் ரோஸ் நிறத்தில் பால் வெளிப்படும்.