விவசாய கேள்வி - பதில்கள்...!

 மரக்கன்று நடவு செய்வதற்கு ஒரு வார முன்பே இதை செய்யுங்க..!❓ தாவரத்தினை சேதப்படுத்தும் வெள்ளை ஈ பற்றி கூறுக?

🐝 வெள்ளை ஈ வேகமாக பறக்காது. இதன் வாழ்க்கை பருவம் ஏறக்குறைய 30 நாட்களில் நிறைவடையும். பெண் பு+ச்சிகளின் முன்

இறக்கைகள் மீது கருப்பு நிற வட்டம் இருப்பதை வைத்து இந்த பு+ச்சியை அடையாளம் காணலாம்.


🐝 வெள்ளை ஈ தாக்குதல் குறிப்பாக வறட்சி மற்றும் காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ள காலங்களில் அதிகமாக காணப்படுகிறது.


❓ வளர்ச்சி ஊக்கி தயாரிக்க ஏன் வாழைமரக் கன்றுகள் பயன்படுத்தப்படுகின்றது? எவ்வாறு கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்? 


🍯 வாழை மரம் தனது நுனிப்பகுதியில் பயிருக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியை இரவில் சேமித்து வைத்திருக்கும் ஆதலால் இதை வளர்ச்சி ஊக்கி தயாரிக்க பயன்படுத்துகின்றன. 


🍯 குறிப்பாக வெயிலில் படுவதற்கு முன் கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் வெயில் பட்டவுடன் நுனிப்பகுதியில் உள்ள வளர்ச்சி ஊக்கியானது மரத்தின் அடிப்பகுதிக்குச் சென்று விடும் அதனால் அதிகாலை 5 மணிக்குள் வாழையின் பக்க கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.


❓ ஒரு செடியில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன? 


🍩 இலை நரம்புப் பகுதிகளில் பச்சைய சோகை மற்றும் புள்ளிகள் காணப்படும்.


🍩 பச்சையத்தை குறைத்து, முடிவில் இலைகளை மஞ்சள் வண்ணமாக்கி விடும்.


🍩 ஒளிச்சேர்க்கையிலுள்ள ஒரு பகுதியின் நிகழ்ச்சியை தடுக்கின்றது.


❓ மரக்கன்றுகளை நாம் நடுவதற்கு எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? 


🌲 நாம் தேர்வு செய்யப்படும் மரக்கன்றுகள் ஒரு அடி உயரத்திற்கு குறைவில்லாதவாறு இருக்க வேண்டும்.


🌲 விரைவாக மரங்கள் வளர வேண்டுமென்றால் 5 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகளை தேர்வு செய்யலாம்.


🌲 மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு ஒரு வாரம் முன்பே குழியை தோண்டி, குழியில் இருந்து எடுத்த மண்ணுடன் தொழு உரம் கலந்து குழியில் நிரப்பி, தண்ணீர் ஊற்றி மண்ணை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும்.


❓ கன்று ஈன்ற ஒரு மாதம் ஆன மாடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துக் கொடுக்கலாமா?


🐃 கொடுக்கலாம். இளங்கன்றுகளை அதிகமாக பாதிப்பது அஸ்காரிஸ் என்னும் கீரிப்புழுக்கள் பென்சில் போன்ற நீண்ட உருண்டையாக இருக்கும்.


🐃 கன்றுகளின் முதல் வார வயதில் அஸ்காரிஸ் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அவற்றிற்கு குடற்புழு நீக்க மருந்தினைக் கொடுக்க வேண்டும்.