விவசாய கேள்வி - பதில்கள்...!

 சாம்பல் நிற வண்டை எளிதாக கட்டுப்படுத்த சூப்பரான கரைசல்..!❓ வேப்பெண்ணெய் கரைசலில் காதி சோப்பை ஏன் பயன்படுத்த வேண்டும்?

🍶 காதி சோப்பு, நீரில் கரைக்க முடியாத பொருளான வேப்ப

எண்ணெயை கரைக்க உதவுகிறது. ஒட்டும் திரவமாக பயன்படுத்துவதால் மருந்துகள் வீணாவது தடுக்கப்படுகிறது.


❓ நொதித்த ஆமணக்கு கரைசலை எந்தெந்த பயிர்களுக்குப் பயன்படுத்தலாம்? அதனால் என்ன பயன்?


🍩 பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களில் சாம்பல் நிற வண்டை எளிதாக கட்டுப்படுத்தலாம்.


🍩 தென்னை மரத்தின் அருகே இந்த கரைசலைப் புதைத்து வைத்தால் துர்நாற்றத்திற்கு பு+ச்சிகள் பானையை நோக்கி வந்து விழுந்து இறந்து விடும்.


🍩 சிறு தானியப்பயிர்களில் இக்கரைசலைப் பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிக்கும்.


❓ நீர் சுழற்சி எவ்வாறு ஏற்படுகின்றது?


💦 மே மாதத்தில் கடல் நீர் பெருமளவு ஆவியாகிறது. இந்த நீராவி மேகங்களால் உறிஞ்சப்படுகிறது.


💦 மழை மேகங்கள் 700 சதுர மைல் அளவுடைய நீராவியை சேகரிக்கிறது. பருவ மழையின் போது இந்த நீர் மழையாகப் பொழிகிறது. நதிகளில் சேரும் நீர் மீண்டும் கடலுக்கு செல்கிறது. இதுவே நீர் சுழற்சி ஆகும்.


❓ தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக சணப்பையை பயிரிடுவதால் ஏற்படும் பயன் என்ன?


🌴 தென்னந்தோப்புகளில் மண் அரிப்பும், களை தொல்லையும், வறட்சியில் நீர் தேவையும் மிகவும் அதிகரிக்கிறது. இதனால் மகசு+ல் இழப்பும் அதிகம் ஏற்படுகிறது. இக்குறைகளை போக்க தென்னந்தோப்பில் ஊடுபயிராக சணப்பு பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.


🌴 சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் பிடிமானம் அதிகமாகி, மேல் மண் அரிப்பு தடுக்கப்படும்.


❓ ஒரு சில பசுக்களின் கன்றுகள் பிறந்தவுடன் இறந்து விடும், அத்தகைய பசுக்களின் சீம்பாலை மனிதர்கள் குடிக்க பயன்படுத்தலாமா?


🐃 கன்றுகள் பிறந்தவுடன் கன்று இறத்தலுக்கான சரியான காரணத்தை மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிதல் வேண்டும்.


🐃 அவ்வாறு இறக்கும் கன்றுகள் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் சில நோய்கள் மூலம் இறந்து இருப்பின் அத்தகைய பசுக்களின் பாலினை யாரும் பயன்படுத்தக் கூடாது.


🐃 பொதுவாக கன்று இறந்துவிட்டால் தாய்ப்பசுவின் பாலை மனிதர்கள் குடிப்பதற்கு அல்லது பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் கூடாது.