விவசாய கேள்வி - பதில்கள்...!

 சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த.. 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் போதும்..!

❓ உயிர் உரங்களைக் குறிப்பிடுக?

🍩 ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, அசோலா,

சு+டோமோனஸ், அசட்டோபேக்டர் போன்றவை உயிரி உரங்கள் ஆகும்.


❓ உப்பு தண்ணீரில் வளரக்கூடிய பயிர்கள் யாவை?


🌱 நெல், கொய்யா, மரநெல்லிக்காய், கம்பு, பீர்க்கங்காய், அவரை, மல்லிகை, கேழ்வரகு போன்ற பயிர்கள் உப்பு தண்ணீரில் வளரக்கூடிய பயிர்கள் ஆகும். 


❓ நாட்டுக்கோழியை அடை வைப்பதற்கு முன்பாக வசம்பை அரைத்துப் பு+சி அடையில் வைத்தால் பேன்கள் வருவதைத் தடுக்கலாமா?


🐓 வசம்பு பு+சி விடுவதன் மூலம் பேன் வருவதைத் தடுக்கலாம்.


🐓 பு+ண்டு அரைத்து தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரில் கோழிகளை முக்கி எடுத்து பின் அடையில் வைக்கலாம்.


🐓 எருக்க இலைகளைச் சுற்றியும் பரப்பிவைத்தால் அந்த இலையின் மீது இருக்கும் பால் போன்ற தன்மையில் பேன் ஒட்டிக்கொள்ளும், தினந்தோறும் இலையை மாற்றி வைக்க வேண்டும்.


❓ வாழையுடன் பயிர் சுழற்சி செய்யக் கூடிய பயிர்கள் யாவை?


🎋 பச்சைப் பயிறு, உளுந்து, சோயா மொச்சை, கொள்ளு, அவரை, நிலக்கடலை போன்ற பயிறு வகைகளை சுழற்சி முறையில் பயிரிடுவதால் இரசாயன உரங்களின் அளவைக் குறைப்பதோடு மகசு+லும் அதிகரிக்கிறது.


🎋 வாழை - மக்காச் சோளம் (2 ஆண்டு பயிர் சுழற்சி) செய்வது வாழை - வாழை பயிர் முறையை விட அதிக மகசு+ல் தரும்.


❓ திராட்சையில் சாம்பல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?


🍇 சாணத்தை கரைத்து வடிகட்டி அந்த நீரை 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை தௌpத்தால் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.


🍇 சுக்கு அஸ்திரம் தௌpப்பதன் மூலம் பு+ஞ்சாண் நோயைக் கட்டுப்படுத்தலாம்.


🍇 ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தௌpக்கலாம் அல்லது நீர்ப்பாசனத்தில் கலந்து விடலாம். 


❓ மாடுகளுக்கு வயிறு உப்புசமாக உள்ளது. அதை எவ்வாறு சரி செய்யலாம்?


🐃 தீவனத்தைத் திடீரென மாற்றுவதனாலும் அல்லது பயறுவகை தீவனத்தை அதிகமாக உட்கொண்டாலும் வயிறு உப்புசமாக இருக்கும். 


🐃 இவைமட்டும் அல்லாமல் உள்வயிறு சுழன்று கொள்வது, புளித்த உணவை அதிகமாக உட்கொள்வது, உண்ட பின் அதிகம் தண்ணீர் குடிப்பது ஆகியவற்றாலும் வயிறு உப்புசம் ஏற்படலாம்.


🐃 இதற்கு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 250 மில்லியை எடுத்து வாய் வழியாக மாடுகளுக்கு கொடுக்கலாம்.


🐃 எண்ணெயுடன் சோப்புத்தண்ணீர் 60 மில்லியை வாய் வழியாக கொடுக்கலாம். மருந்து ஊற்றும் போது புறை ஏற்படாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.


❓ பசுமாடு நன்றாக தீவனம் எடுப்பதற்கு என்ன செய்யலாம்?


🐄 பசு மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யலாம். சினைக்கு போட்ட ஆரம்பகால சினை மாட்டிற்கு குடற்புழு நீக்கம் செய்யக் கூடாது. கற்றாழை, பிரண்டை தினமும் 250 கிராம் கொடுத்து வரலாம். 


🐄 இவற்றைச் செய்வதன் மூலம் மாடுகள் நன்றாக தீவனம் உட்கொள்ளும். தண்ணீரில் 300 கிராம் தாது உப்பு கலவையைக் கலந்து வைக்கலாம்.