நெல்லில் வரும் லட்சுமி நோய் பற்றி உங்களுக்குத் தெரியுமா..?

 நெல்லில் மஞ்சள் கரிபு+ட்டை நோய் ரூ மேலாண்மை..! 

நெல்லில் மஞ்சள் கரிபு+ட்டை நோய் - லட்சுமி நோய்:

🌾 இதனால் ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிற பழம்

போல் மாறிவிடும். மென்பட்டு போன்ற தோற்றத்துடன் கருப்பு நிற நெல் பழ உருண்டைகள் காணப்படும்.


🌾 முதலில் இந்த உருண்டைகள் சிறியதாகவும், பின்பு வளர்ச்சி அடைந்து 1 செ.மீ வரை பெரியதாகிறது.


🌾 இவை நெல் உமிகளுக்கு இடையே காணப்படும். பு+க்கும் போது பு+ பகுதிகளை சுற்றியும் இருக்கும். சில தானியங்கள் மட்டுமே தாக்கப்பட்டு மற்றவை நல்ல மணிகளாக இருக்கும்.


🌾 பு+ஞ்சாண வளர்ச்சி தீவிரமாகும் போது உருண்டை வெடித்து காற்றில் பரவுவதால் மற்ற பயிர்களுக்கும் எளிதில் பரவுகிறது.


நோய் கட்டுப்பாடு மேலாண்மை:


🌾 இந்த நோயின் தாக்கம் நெல்லின் கதிர் பருவத்தில் அதிகமாக இருக்கும். வளர்ச்சி பருவத்தில் தெரியாது.


🌾 அதிகமழை, அதிக தழைச்சத்து இடுவதால் நெல்லில் பு+ஞ்சாண வித்துக்கள் ஏற்கனவே இருப்பதால் இந்தநோய் உண்டாகிறது. 


🌾 இந்த நோய் வந்த பின்னர் கட்டுப்படுத்துவது கடினம். இது நடப்பட்ட பயிரைவிட முன் நடவு பயிர்களை அதிகம் பாதிக்கிறது. தழைச்சத்து உரத்தை பிரித்து அளிக்க வேண்டும்.


🌾 குளிர்காலத்தில் முறையாக வயலை கண்காணிக்க வேண்டும். விதை மூலம் பரவும் என்பதால் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சு+டோமோனாஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.


அதிக மகசு+ல் தரும் பாரம்பரிய நெல்..!! 


🌾 ரசாயன நெடி பெருகி விட்ட விவசாயத்தை கைவிட்டு மண் மணம் வீசும் உடலுக்கு அதிக சத்து தரக்கூடிய பாரம்பரிய முறை விவசாயத்தை கடைப்பிடிப்பதற்கான முனைப்பு விவசாயிகள் மத்தியில் பெருகி வருகிறது.


🌾 தமிழகத்தில் பழங்காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் ரகங்கள் இன்று புழக்கத்திலேயே இல்லாத அளவுக்கு அழிந்துவிட்டது. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் விவசாய ஆர்வலர்கள் பலர் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.


🌾 அன்னமிளகி, அறுபதாங்குறுவை, பு+ங்கார், குழி வெடிச்சான், குடவாழை, காட்டுப்பொன்னி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு சீரக சம்பா, கட்டிச்சம்பா, வரப்பு குடைஞ்சான், யானை கவுனி, வெள்ளைக்கார் குருவி உள்ளிட்டவை பாரம்பரிய நெல் ரகங்களில் சில.


🌾 பாரம்பரிய நெல் ரகங்களுள் ஒன்றான மாப்பிள்ளை சம்பா நெல் ஒரு ஆள் உயரத்துக்கு வளரக்கூடிய சிறப்பு கொண்டது. இந்த நெல் ரகம் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு நன்கு வளர்வதாகவும், அதிக மகசு+ல் தரக்கூடியதாகவும் விளங்குகிறது.


🌾 இதன் காரணமாக மாப்பிள்ளை சம்பாவை சாகுபடி செய்ய விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதில் உள்ள சிரமங்கள் குறைவு. மாப்பிள்ளை சம்பா 160 நாட்கள் முதல் 170 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.


🌾 மாப்பிள்ளை சம்பா நெற்பயிரினை சாகுபடி செய்வது எளிதாக உள்ளது. புயல், மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை தாண்டி இப்பயிர் ஆரோக்கியமாக வளரும். இதில் பு+ச்சி தாக்குதல் இருக்காது. ஒரு நெல் நாற்றில் 10-க்கும் மேற்பட்ட தூர்கள் வெடித்து அனைத்திலும் நெற்கதிர் உருவாகும்.


🌾 இதனால் குறைந்த செலவில் பாதிப்பின்றி அதிக மகசு+ல் மற்றும் லாபம் பெறலாம். உடல் வலு தரும் மாப்பிள்ளை சம்பா நெல் சர்க்கரை நோய், நரம்பு வலுவிழத்தல் உள்ளிட்ட நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.