❓ கொய்யா மரத்தின் காய்களை எவ்வாறு பழுக்க வைக்கலாம்?
🍈 கொய்யா மரத்தின் காய்களை அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்து, வாழை சருகுகளால் மூட வேண்டும். இத்துடன் நன்றாக பழுத்த எலுமிச்சை, சாத்துக்குடி பழங்களில் ஏதேனும் ஒன்றைப் போட்டு மூடி வைத்து விட்டால், மூன்று அல்லது நான்கு நாட்களில் நன்கு பழுத்து விடும்.
🍈 சாத்துக்குடி, எலுமிச்சை பழத்தில் இருந்து வரும் ஒருவித என்சைம், காயாக உள்ளவற்றை கனியாக்கி விடும். பழங்களும் ஒரே சீராக பழுத்துவிடும்.
🍈 ஒருபுறம் கனிந்தும், ஒரு புறம் காயாகவும் இருக்காது. நமது தேவைக்கு ஏற்ற வகையில் பழுக்க, பழுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த பக்க விளைவுகளும் இருக்காது.
❓ பாலக்கீரை சாகுபடியில் எப்பொழுது களை எடுக்க வேண்டும்?
🌿 கீரை விதைகள் விதைத்த ஒரு வார காலத்தில் முளைக்க ஆரம்பிக்கும். களைகளால் கீரைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே 10 - 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் செய்ய வேண்டும்.
❓ தானியக் கிடங்குகளில் பு+ச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
🐞 தானியக் கிடங்குகளில் சேமிக்கும் போது விதைகளோடு, காய்ந்த வேப்பிலையைக் கலந்து சேமிக்க வேண்டும்.
🐞 விதை சேமிக்கும் போது, காய்ந்த நொச்சி இலைகளைக் கலந்து சேமித்தல் வேண்டும்.
🐞 விதைகளில் புங்கம் இலைகள் கலந்து பின் சேமிக்கலாம்.
❓ பயிர்களை பு+ச்சி தாக்குதலில் இருந்து எப்படி கட்டுப்படுத்தலாம்?
🎍 பயிர் சாகுபடி செய்யும் வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசையில் சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திப்பேன் உள்ளிட்ட பு+ச்சிகள் வயலின் உள்ளே போகமுடியாத வண்ணம் தடுக்கலாம்.
🎍 தங்க அரளி மற்றும் செவ்வரளி செடியை வரப்புப் பயிராகப் பயிரிட்டால் அது கவர் செடியாக செயல்பட்டு அது பு+ச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தளாம்.
❓ ஆடுகளுக்கு ஏற்படும் உதட்டு அம்மை நோய்க்கான அறிகுறிகள் என்ன?
🐐 ஆடுகள் தீவனம் உண்ணாது, உடலில் அதிகமான சு+டு இருக்கும். மேலும் கழிச்சலும் காணப்படும்.
🐐 நோயுற்ற ஆடுகளில் சுவாசக்கோளாறு இருக்கும். ஆடுகளின் வாயின் உள்பகுதிகளில் புண்களோ அல்லது தசைக்கட்டி வளர்ச்சியோ காணப்படும். நோயின் தன்மை அதிகரிக்கும்போது வாய், நாக்கு, நாசி மற்றும் உதடுகளில் புண்கள் தோன்றும்.