பயிர்களை தாக்கும் பு+ச்சிகள் எப்படி வேண்டுமானாலும் பரவி சேதத்தை ஏற்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இவை காற்று, விதை, தானியம் ஆகியவற்றின் மூலமும் மற்ற இடங்களுக்கு
பரவுகின்றன. அவ்வகையில் தற்போது பயிர்களை அதிகம் பாதிப்படையச் செய்வது பால் ஆர்மிவார்ம்(கயடட யசஅல றழசஅ) எனப்படும் படைப்புழு. இந்த படைப்புழுவை இயற்கை முறையில் எளிமையாக கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து இங்கு ஒருவர் கூறுகிறார் வாங்க காணலாம்.குகன் : இந்த நேரத்தில் வயலில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..?
ரத்தினம் : வயலில் ஏதோ ஒரு புழு உள்ளது. அதன் தாக்குதல் அதிகமாகி கொண்டே போகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அதனால் இந்த புழு ஒன்றை பிடித்து அதை பற்றி யாரிடமாவது கேட்டு அவற்றை கட்டுப்படுத்தலாம் என நினைத்தேன்.
குகன் : அட.. இது படைப்புழு தாக்குதல்?
ரத்தினம் : படைப்புழுவா..?? இந்த புழுவை பற்றி உங்களுக்கு தெரியுமா..??
குகன் : ஓ.. தெரியுமே..!
ரத்தினம் : இது எப்படி படைப்புழு தாக்குதல் என்கின்றீர்கள்?
குகன் : பயிர்களில் உள்ள அறிகுறிதான்.. அதாவது படைப்புழுவின் இளம் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சாப்பிட்டுவிடும். இதனால் இலைகள் பச்சையத்தை இழந்து வெண்மையாக காணப்படும். இதில் 3 முதல் 6-ம் நிலை புழுக்கள் இலையுறைக்குள் சென்று சேதத்தை ஏற்படுத்தும்.
ரத்தினம் : இது படைப்புழு என்றால் எப்படி கட்டுப்படுத்துவது?
குகன் : வயல்களில் விளக்குப்பொறி வைத்து, இந்த பு+ச்சியின் நடமாட்டத்தை கண்டுபிடித்து, பின்னர் இனக்கவர்ச்சி பொறி கொண்டு அழித்துவிடலாம். நொச்சிச்சாறு, தும்பைச்சாறு மற்றும் வேம்புச்சாறு முதலியவற்றை பயிர்களின் குருத்துக்களில் தௌpத்து கட்டுப்படுத்தலாம். பயிர்சுழற்சி முறையை கையாண்டும் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
ரத்தினம் : அப்படியா..?? வேறு ஏதாவது கரைசல் பயன்படுத்தலாமா..??
குகன் : பயன்படுத்தலாம்.. அதையும் கூறுகிறேன்.. பசு கோமியம் 15 லிட்டர், அடுப்புச் சாம்பல் 3 கிலோ, வேப்பங்கொட்டை பொடி 3 கிலோ, மிளகாய்ப்பொடி அரை கிலோ, வசம்புப்பொடி 25 கிராம், பெருங்காயம் பொடி 25 கிராம், இஞ்சி 250 கிராம், பு+ண்டு 250 கிராம், வெங்காயம் அரை கிலோ, சோற்றுக்கற்றாழை 5 முதல் 7 மடல் (இடித்தது) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பயிர்களின் மீது தௌpக்க வேண்டும்.
ரத்தினம் : நீங்களும் இதை தான் பயன்படுத்துவீர்களா..??
குகன் : இதையும் பயன்படுத்துவேன்.. அதிகமாக பொடியை தான் பயன்படுத்துவேன்.
ரத்தினம் : பொடியா..?? அதை எப்படி தயாரிப்பது?
குகன் : 25 கிலோ அடுப்புச் சாம்பல், 25 கிலோ ஆட்டுச்சாணம் (நிழலில் உலர்த்தி பின் பொடியாக உடைத்தது), மிளகாய்ப் பொடி 2 கிலோ, மஞ்சள் பொடி 2 கிலோ, வசம்புப்பொடி 100 கிராம், பெருங்காயம் பொடி 100 கிராம், வேப்பங்கொட்டைப்பொடி 20 கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, காலை வேளையில் பனியின் ஈரப்பதம் இருக்கும் போது பயிர்களின் மீது தூவ வேண்டும்.
ரத்தினம் : உங்களுக்கு இவ்வளவு தெரியுமா..?? நீங்க சொன்னபடியே நானும் கரைசல் தயாரித்து பயன்படுத்தி பார்க்கிறேன்.. மிக்க நன்றி..!