❓ மரங்கள் வறட்சியை தாங்கி வளர்வதற்கு எவ்வாறு நடவு செய்ய வேண்டும்?
🌴 மரக்கன்றுகளுக்கு குறைந்தது இரண்டு அடி உயரம் மற்றும் நல்ல கிளைவேர்கள் இருக்க வேண்டும். நடவுக்குழி குறைந்தது ஒன்றரை அடி ஆழம் இருக்க வேண்டும். அதில் முதலில் ஒரு கைப்பிடி
அளவில் சுண்ணாம்புத் தூள் தூவ வேண்டும். பிறகு ஒரு கிலோ மண்புழு உரம், அரை கிலோ வேப்பம் புண்ணாக்கு, இவற்றுடன் மண் கலந்து குழியை அரை அடி உயரம் நிரப்ப வேண்டும்.🌴 தரைமட்டத்தில் இருந்து செடியை ஒரு அடி ஆழத்தில் நடவு செய்வதால் ஈரப்பதம் வேருக்கு கிடைப்பதுடன் வேரின் வளர்ச்சி சற்று ஆழமாக பரவும். இதனால் வேகமாக வீசும் காற்றை தாங்கும் சக்தி அதிகரிக்கும். வறட்சியையும் நன்கு தாங்கி வளரும்.
❓ முருங்கை மரத்தில் அதிக மகசு+லைப் பெறுவதற்கு என்ன இயற்கை மருந்து கொடுக்கலாம்?
🌲 இரண்டு முறை நுனி கிள்ளி விடுவதன் மூலம் அதிக துளிர் விட்டு அதிக கிளைகளைப் பெற்று காய்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
🌲 மண்புழு உரம், மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல், உயிர் உரங்கள் இவற்றைத் தொடர்ந்து வேரில் இடுவதால் திரட்சியான மற்றும் எடை அதிகமான காய்களைப் பெறலாம்.
🌲 மீன் அமினோ அமிலத்தை இலைகள் மீது தௌpப்பதாலும், வேரில் இடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளைப் பெறலாம் மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும்.
❓ மணல் மண்ணிற்கு கீரை பயிர் எதுவும் வளரவில்லை, என்ன செய்யலாம்?
🌿 வயலில் தொழு உரம் போடலாம் மற்றும் வண்டல் மண்ணை மணல் மண் உள்ள நிலத்தில் கொட்டுவதால் தண்ணீர் தேக்கிவைக்கும் திறன் அதிகரிக்கும்.
🌿 சணப்பை, தக்கைப்பு+ண்டு போன்ற பசுந்தாள் உரங்களை வயலில் வளர்த்து பு+க்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும். இதனால் பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இவற்றை செய்வதன் மூலம் நிலத்தை வளப்படுத்தலாம்.
🌿 மணல் தாரை நிலத்தில் தென்னை, சவுக்கு, முந்திரி, பனை மரம் நன்றாக வளரும்.
❓ மிளகு அதிக அளவு காய்ப்பிடிக்க மற்றும் அதிக மகசு+ல் பெற என்ன செய்வது?
🌑 பஞ்சகாவ்யம் தௌpப்பதால் பு+ச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் எதிப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் காய்கள் அதிகம் பிடிக்கும்.
🌑 காய்க்கும் தருணத்தில் தேங்காய் கடலைப் புண்ணாக்கு வைப்பதால் திரட்சியான காய்கள் மற்றும் அதிக மகசு+ல் கிடைக்கும்.
❓ கன்று குட்டி மிக வேகமாக வளர்வதற்கு என்ன செய்யலாம்?
🐄 குடற்புழு நீக்கம் செய்வதால் நன்கு தீவனம் எடுத்துக்கொள்ளும். தடுப்பு+சிகள் போடுவதால் கன்றுகளுக்கு நோய்கள் வராது.
🐄 தொடக்கத்தில் பாலும் அதனுடன் 100 கிராம் அளவு தீவனமும் மற்றும் தேவையான அளவு தண்ணீரும் கொடுக்க வேண்டும்.
🐄 தொடர்ந்து தீவன அளவை அதிகப்படுத்த வேண்டும். கன்றுக்கு ஆறு வார வயது காலத்தில் நாள் ஒன்றுக்கு 900 - 1000 கிராம் அளவு தீவனம் கொடுத்தால் கன்று குட்டி வேகமாக வளரும்.