ஆடுகளுக்கு இந்த ஒரு தீவனத்திலேயே.. உடல் எடையை அதிகரிக்க செய்யலாம்..!
❓ மாவுப்பு+ச்சி எந்தெந்த பயிர்களைத் தாக்கி பாதிப்புகளை உண்டாக்குகின்றது?
🐝 மாவுப்பு+ச்சிகள் பப்பாளி, மல்பெரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களை எளிதில் தாக்குகிறது.
🐝 காற்று, பறவைகள், விலங்குகள், தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடியது.
❓ தண்டுகீரை சாகுபடியில் எவ்வாறு நீர்பாசனம் செய்ய வேண்டும்?
🌿 கீரை விதைகள் விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்து செல்லாமல் இருக்க பு+வாளியால் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
🌿 விதைத்த மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். நிழல் பகுதியாக இருக்கக் கூடாது. அதிகம் வெளிச்சம் தேவைப்படும்.
❓ மேட்டுப்பாங்கான நிலத்தில் என்னென்ன பயிர்களைப் பயிரிடலாம்?
🍘 மேட்டுப்பாங்கான நிலம் என்பது புஞ்சை சாகுபடிக்குரிய நிலம்.
🍘 இதில் நிலக்கடலை, ஆமணக்கு, சோளம், துவரை, உளுந்து, மூலிகைகள், முருங்கை போன்றவற்றை சாகுபடி செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் சமயத்தில் மல்பெரி சாகுபடி செய்யலாம்.
❓ கேரட் சாகுபடியில் பு+ச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை வழிமுறை என்ன?
🍠 இலைகளின் உட்பக்கத்தில் உட்காரும் பச்சை தத்துப்பு+ச்சியைக் கட்டுப்படுத்த செங்கல் சு+ளை சாம்பலைத் தூவ வேண்டும்.
🍠 இலைச்சாறு உறிஞ்சும் பு+ச்சியைக் கட்டுப்படுத்த கேரட் சாகுபடியில் ஊடுபயிராக ஏதேனும் விதைக்கலாம்.
❓ ஆட்டுக்கு பருத்திக்கொட்டை புண்ணாக்கைக் கொடுப்பதால் என்ன பயன்?
🐐 ஆட்டிற்கு பருத்திக் கொட்டை புண்ணாக்கைக் கொடுத்து வருவதால் பால் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் உடல் எடையும் அதிகரிக்கும்.
🐐 மேலும் ஆடுகளின் உடலும் ஆரோக்கியத்துடன் காணப்படுவதால் அதிகமான குட்டிகளையும் ஈனும் தன்மை கொண்டதாக இருக்கும்.