பயிர் சுழற்சி செய்யாமல் இருந்தால் இந்த பிரச்சனை தான் வரும்..!

 விவசாய கேள்வி - பதில்கள்...! 

❓ நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்யலாம்?


🌾 நன்செய் நிலங்களில் மண்ணினை உழவு செய்து நல்ல மென் தன்மையைக் கொண்டு வர இயலாது.


🌾 நெல் அறுவடை செய்த பின் 40 செ.மீ ஆழமும், 30 செ.மீ அகலமும் கொண்ட பாசன வாய்க்கால் - வடிகால்வாய் அமைக்கலாம்.


🌾 மண்வெட்டி கொண்டு 80 செ.மீ இடைவெளியில் பார் மற்றும் பாத்தி அமைக்கலாம்.


🌾 கைக்கொத்து மூலம் பாத்திகளை நன்கு கொத்தி கலக்கி விட்டு, 4 - 5 நாட்களுக்கு மண்ணினை காயவிட வேண்டும்.


❓ எந்த பகுதியில் செம்மரம் நன்கு வளரும்?


🌲 செம்மண், செம்மண்ணில் கல் கலந்த காடு (புசுயுஏநு ளுழுஐடு) போன்ற இடங்களில் சிறப்பாக வளரும்.


🌲 மேட்டுப்பாங்கான நிலங்களில் சிறப்பாக வளரும், உதாரணமாக, வறண்ட வனப் பகுதிகள் சிறந்தவை.


🌲 மேட்டுப்பாங்கான இடங்களில் மழைநீரை சிறப்பான முறையில் அறுவடை செய்தல் மிகவும் அவசியம். (உயரமான வரப்புகள் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். மழை நீரை முழுமையாக அறுவடை செய்திட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்) 


❓ பொதுவாக செடிகளை படைப்புழு தாக்குவதற்கான காரணங்கள் என்ன? 


🐛 பருவ சு+ழ்நிலை மாற்றங்கள்.


🐛 இயற்கை எதிரிகள் அதாவது நன்மை செய்யும் பு+ச்சிகள் இல்லாமல் இருப்பது.


🐛 செயற்கை இரசாயன பு+ச்சிக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்துவது.


🐛 பயிர் சுழற்சி செய்யாமல் இருப்பது.


🐛 எதிர்ப்பு தன்மை கொண்ட நாட்டு ரகங்கள் இல்லாமல் இருப்பது.


❓ முல்லையில் நீளமான மொட்டுக்கள் வருவதற்கு என்ன மருந்து கொடுக்கலாம்?


🌼 மொட்டுகள் நன்கு நீளமாக வளர மீன் அமிலம் வாரம் ஒரு முறை தௌpக்க வேண்டும். வேரில் பாசன நீருடன் கலந்து விடுவதாலும் முல்லையில் நீளமான மொட்டுக்களைப் பெறலாம்.


❓ பசுந்தீவனமான கொழுக்கட்டைப்புல் பயிர் செய்வது எப்படி? 


🌿 கொழுக்கட்டைப்புல் நடவு செய்ய ஏக்கருக்கு 3.5 கிலோ விதைகள் தேவைப்படும்.


🌿 இதனை 50 ஓ 50 செ.மீ இடைவெளியில் நடவு செய்யலாம்.


🌿 இந்த ரக பயிர்களை விதைத்த 70 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம்.


🌿 இதன் மூலம் வருடத்திற்கு 16 டன் பசுந்தீவனம் மகசு+லாக கிடைக்கும்.


❓ மாட்டிற்கு சினை ஊசி எத்தனை நாளில் போட வேண்டும்?


🐂 கன்று குட்டிகளுக்கு பிறந்து 30 மாதங்கள் கழித்து சினை ஊசி போடலாம். கன்று ஈன்ற மாடுகளுக்கு 40 - 60 நாட்கள் கழித்து சினை ஊசி போடலாம்.