❓ நெல் வயலில் பு+ச்சிகளை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
🌾 நெல் நாற்றுகளை வயலில் நடும்பொழுது முட்டைக்குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளை கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
🌾 நடவு செய்த 10 நாட்களுக்கு பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் குருத்துப்பு+ச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
🌾 டிரைக்கோகிரம்மா என்ற முட்டை ஒட்டுண்ணியை இருமுறை அதாவது நடவு நட்ட 30 மற்றும் 37-வது நாட்களில் வயலில் வெளியிட வேண்டும்.
🌾 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்ப எண்ணெயை ஒட்டும் திரவத்துடன் கலந்து தௌpக்க வேண்டும்.
❓ தென்னையில் குரும்பை உதிர்வதற்கான காரணம் என்ன?
🌴 தென்னை மரங்களில் குரும்பைகள் உதிர்வது மகசு+லை குறைத்து விடுகிறது. இதற்கு நிலத்தில் உள்ள அதிக களர் தன்மை அல்லது அமிலத்தன்மையே காரணம் ஆகும்.
🌴 போதுமான காற்றோட்டம் மண்ணில் இல்லாத நிலை ஏற்படும் போது குரும்பைகள் உதிரும். இதற்கு உரிய முறையில் சம உயர வடிகால் வாய்க்கால் அமைத்து மழையால் பெறப்படும் கூடுதல் நீரை வெளியேற்ற வேண்டும். வறட்சி காலத்தில் மண் ஈரம் பற்றாக்குறையால் குரும்பைகள் உதிரும்.
🌴 குரும்பைகள் உதிர்வதற்கு சத்து பற்றாக்குறையும் ஒரு காரணமாகும்.
❓ நாற்றுப்பண்ணை தொழிலை எப்படி கற்றுக்கொள்ளலாம்?
🌱 நாற்றுப்பண்ணையை ஆங்கிலத்தில் நர்சரி கார்டன் என அழைக்கின்றனர். இந்த நாற்றுப்பண்ணை தொழிலை மேற்கொண்டால் நல்ல லாபம் பெற முடியும்.
🌱 ஆண்டு முழுவதும் லாபம் தரும் தொழிலாகவே உள்ளதால், இதற்கு முன் அனுபவமும் எதுவும் தேவையில்லை. மேலும் அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணையை அணுகி மலர் செடிகள் வளர்க்கும் முறையை எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
❓ மக்காச்சோளத்தில் நுனிக்கருகல் அதிகமாக உள்ளது. அதை எப்படி சரி செய்யலாம்?
🌽 மக்காச்சோளத்தில் நுனியில் கருகலைத் தடுக்க சோற்றுக்கற்றாழை 3.5 கிலோ, இஞ்சி 200 கிராம், இவற்றுடன் புதினா இலை 2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
🌽 ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்து, சு+டோமோனஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து கிடைக்கும் விழுதினை 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் என கலந்து செடிகளில் தௌpக்கலாம்.
❓ கறவை மாடுகளுக்கு சத்துமிக்க அடர் தீவனங்களை ஏன் கொடுக்க வேண்டும்?
🐂 கறவை மாடுகளுக்கு மாவுச்சத்து அதிகமுள்ள தீவனம் கொடுத்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
🐂 எனவே, புரோட்டீன், கொழுப்புகள் மற்றும் இதர சத்துக்கள் அடங்கிய சத்துணவு அளிக்க வேண்டும். இந்த தீவன முறையை பின்பற்றினால், மாடுகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து வளர்ச்சி, பால் உற்பத்தி, கருத்தரித்தல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை அதிகரிக்க செய்யலாம்.