❓ கத்தரியில் காய் அழுகல் அதிகமாக உள்ளது. அதை எவ்வாறு சரி செய்யலாம்?
🍆 கத்தரியில் காய் அழுகலைத் தடுக்க 8 சோற்றுக் கற்றாழை இலையை (மடலை) எடுத்து நன்றாக நசுக்கி 1 லிட்டர்
தண்ணீரில் சேர்த்து அதன் பின் செடிகளில் தௌpக்கலாம்.❓ கடற்பாசி உரம் பற்றி கூறுக?
🍀 கடற்பாசி என்பது கடல் மற்றும் கடற்கரைகளில் கிடைக்கக்கூடிய பாசி வகை தாவரமாகும். இதில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளன. சில நாடுகளில் உணவுப் பொருளாகவும், உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.
🍀 கடற்பாசியை உரமாக பயன்படுத்துவதால் பயிர், காய்கறி மற்றும் பழங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்து பு+ச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிரைப் பாதுகாக்கின்றது.
❓ கத்தரியில் நாற்று நன்றாக வளரவில்லை மற்றும் இலைகள் சுருண்டு உள்ளது. அதை எப்படி சரி செய்யலாம்?
🍆 டிரைக்கோடெர்மா அல்லது சு+டோமோனஸ் மற்றும் பீஜாமிர்தம் கரைசலைக் கொண்டு விதை நேர்த்தி செய்த பின் விதைக்கலாம்.
🍆 ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் சு+டோமோனஸ் கலந்து செடியின் மீது தௌpக்கலாம்.
🍆 பிரம்மாஸ்திரம் கரைசலைத் தௌpக்கலாம் அல்லது வேப்பங்கொட்டைச் சாற்றைத் தௌpக்கலாம். இவற்றைத் தௌpப்பதன் மூலம் கத்தரி நாற்று நன்றாக வளரும்.
❓ கரும்பிற்கு உயிர் உரங்களை எப்படி பயன்படுத்தலாம்?
🌴 கரும்பிற்கு அசட்டோ பேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்பேட் கரைக்கும் பாக்டீரியா (பாஸ்போ பாக்டீரியா) போன்ற உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம். ஒரு எக்டேருக்கு 12 - 15 கிலோ உயிரி உரங்களை இட வேண்டும்.
🌴 கரணை நேர்த்தி : ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ உயிர் உரங்களை கலந்து அதில் நடவுக்கு முன் கரும்பு கரணையை முழுமையாக நனைத்து எடுக்க வேண்டும்.
🌴 மண்ணில் இடும் முறை : தொழுவுரம் 80 - 100 கிலோ மற்றும் 5 கிலோ உயிர் உரங்களை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, இந்தக் கரைசலை கரும்பு விதைக் கரணைகளின் மேல் தௌpத்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்யப்பட்ட வரப்புகளை, உடனடியாக மண்ணை போட்டு மூடி விட வேண்டும்.
❓ சினை மாடு கன்று ஈனுவதற்கு என்னென்ன அறிகுறிகளை வெளிப்படுத்தும்?
🐂 சினை மாடு அடிக்கடி தரையில் படுத்து எழும். தீவனம் சாப்பிடுவது குறையும். மாடு அடிக்கடி தலையை திருப்பி வால் பகுதியை நோட்டமிடும். மேலும் மாட்டில் இருந்து கன்று வெளியே வரும் பகுதி நன்றாக தளர்ந்தும், சிவந்தும் காணப்படும்.
🐂 அத்துடன் மாடும் அடிக்கடி முக்கத்தொடங்கும். பனிக்குடம் உடைந்து அதில் இருந்து அதிக அளவில் திரவம் வெளிவரும். காம்புகள் பெரிதாகவும், சுரந்தும் காணப்படும். பால் மடியானது பெரியதாகவும், சீம்பால் நிரம்பியும் காணப்படும்.