மண் அரிப்பைத் தடுத்து மண் வளத்தை பெருக்கும் மரங்கள்..! விவசாய கேள்வி - பதில்கள்...!

 ❓ பசுமைக்குடில் பயிர் சாகுபடி முறைக்கும், சாதாரண நிலங்களில் பயிர் சாகுபடி முறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

🎍 பசுமைக்குடில் சாகுபடி முறையில் பயிருக்கு ஏற்ப கட்டுப்படுத்தப்பட்ட வெப்பம், தண்ணீர் மற்றும் உரம் அளிக்கப்படுகிறது.

மேலும், சுற்றுப்புற நோய்ப்பரவல் காரணிகளில் இருந்து விலகி இருப்பதால் செடிகள் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.


🎍 ஆனால், சாதாரண நிலங்களில் பயிர் செய்யும் போது தண்ணீருக்கும், உரத்திற்கும், பயிரை தாக்கும் பு+ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அதிக அளவில் செலவிட நேரிடுகிறது. இதனால், பயிர் சாகுபடிக்கான செலவு அதிகரிக்கிறது.


❓ பருத்தியில் வரும் கெண்டை நோய் என்றால் என்ன? அந்த நோயை எப்படி தடுப்பது?


🍁 கெண்டை நோய் என்பது, பருத்தி செடி பெரியதாகி காய் பிடிக்கும் சமயத்தில், செடியின் கீழ் பகுதி முறிந்து விழுந்து செடி காய்ந்து விடும்.


🍁 இதை தடுக்க பருத்தி செடிக்கு 60-ம் நாள் மண் அணைக்கும் போது கொடுக்கும் மண்புழு உரத்துடன் ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து பயன்படுத்தினால், இந்த நோய் தாக்குதலை தடுக்கலாம்.


❓ மண் அரிப்பைத் தடுத்து மண் வளம் பெருக எந்த வகை மரங்களை நடவு செய்ய வேண்டும்?


🌲 மழை குறைவாக உள்ள பகுதிகளில் குடைவேல், வெள்வேல் போன்ற மரங்களும், நீர் தேங்கும் இடங்களில் பெருமூங்கில், இலுப்பை, புங்கம் போன்ற மரங்களும் பயிரிட வேண்டும்.


🌲 இவை எரிபொருளாகவும், எண்ணெய் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய மரங்களை தேர்வு செய்து நடுவதால் மண் அரிப்பு தடுக்கப்படுவதோடு மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் பெருக்கமடையும்.


❓ வெங்காயத்தின் அடித்தண்டில் வரும் அழுகல் நோயை எப்படி தடுக்கலாம்?


🍓 சாறு உறிஞ்சும் பு+ச்சிகள் இல்லாமல் கருகல் பாதிப்பு மட்டும் இருந்து அடித்தண்டில் அழுகல் காணப்பட்டால் இது பு+ஞ்சாண் நோய் ஆகும். இதனை தடுக்க பு+ஞ்சாண கொல்லி தௌpக்க வேண்டும்.


🍓 ஒரு லிட்டர் தண்ணீருக்கு சு+டோமோனஸ் 5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தௌpக்க வேண்டும். இவற்றை நீர் பாசனத்துடன் கலந்து விடலாம்.


❓ ஆடு, மாடுகளுக்கு இயற்கையான முறையில் குடற்புழு நீக்கம் எப்படி செய்வது?


🐃 2 அங்குல நீள சோற்றுக் கற்றாழையில் முள்ளை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, அப்படியே சாப்பிடக் கொடுக்க வேண்டும். உப்பு, வெல்லம் கலந்த கலவையில் சோற்றுக்கற்றாழையை முக்கி எடுத்து கொடுக்கலாம். 


🐃 ஆட்டுக் குட்டிகளுக்கு ஓர் அங்குலம் போதுமானது. குடற்புழு நீக்கம் அடிக்கடி செய்யத் தேவையில்லை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.