அசத்தலான கரைசல்.. அவரைச் செடியின் வளர்ச்சிக்கு இதுதான் பெஸ்ட்!

 செடி அவரைக்கு இயற்கை உரம் !! 

👉 அவரையானது செடி அவரை மற்றும் கொடி அவரை என வகைப்படுத்தப்படுகிறது. செடி அவரையில் பு+ கொட்டும் பாதிப்பு அதிகம் காணப்படும். அதற்கு ஒரு இயற்கை தீர்வு உண்டு. அதைப்பற்றி இங்கு காண்போம்.


தயாரிக்கும் முறை :


🌿 இயற்கை உரம் தயாரிக்க வாழை மரத்தின் பக்கக் கன்றுகள் 5, வெல்லம் அரைக்கிலோ, மூன்று நாட்கள் புளித்த தயிர் அரைலிட்டர், பெருங்காய பொடி 100 கிராம், இரு கையளவு முருங்கை கீரை மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் ஆகியவை தேவைப்படும்.


🌿 முதலில் வாழை மரத்தின் பக்கக் கன்றுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.


🌿 பின்னர் வெல்லத்தை நன்கு பொடிசெய்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வாழை மரத்தின் துண்டுகளை போட்டு ஊறவிட வேண்டும்.


🌿 அதன் பின் பெருங்காயத்தூள் மற்றும் முருங்கை கீரையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அவற்றை மூன்று நாள் புளிக்க வைத்த தயிரில் கரைத்து, அதன் பிறகு அதை வெல்லக்கரைசலில் சேர்த்து கலக்கி மூடி வைக்க வேண்டும்.


🌿 பிறகு அடுத்த நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தௌpத்து வந்தால் பு+க்கள் உதிராமல் இருக்கும்.


🌿 வாழை மரம் தனது நுனிப்பகுதியில் பயிருக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியை இரவில் சேமித்து வைத்திருக்கும். வெயில் பட்டால் அவை மரத்தின் அடிப்பகுதிக்குச் சென்று விடும், அதனால் அதிகாலை 5 மணிக்குள் வாழையின் பக்கக் கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.


🌿 முருங்கை கீரையில் இரும்புச்சத்து, புளித்த தயிரில் வளர்ச்சி ஊக்கிகள், பெருங்காயத்தில் பு+க்கள் அதிகம் பிடிக்கும் தன்மை போன்ற பயன்கள் உள்ளதால் இது செடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கோரையை கட்டுப்படுத்தும் வழிமுறை !!


👉 வயலில் உள்ள கோரையை அதன் கிழங்குடன் தோண்டி எடுத்து சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


👉 பின்னர் சேகரித்த கோரைக்கிழங்குகளை தீயில் போட்டு எரித்து சாம்பலாக்கி கொள்ள வேண்டும். அந்த சாம்பலை பயிருக்கு நீர்ப்பாசனம் செய்யும்போது கலந்து விட்டால் வயலில் அனைத்து இடத்திற்கும் பரவும்.


👉 இந்த சாம்பல் கலந்த நீரானது நிலத்திற்குள் சென்று வயலில் இருக்கும் கோரைகளை அழித்துவிடுகிறது.


👉 இவ்வாறு செய்தால் மறுமுறை பயிர் செய்யும்போது கோரை தொல்லை இருக்காது. 


👉 கோரை கிழங்கின் மூலமாகவே பரவுவதால், கிழங்கு இல்லாத கோரைகளை வரப்பில் போட்டால் நிலத்திற்கு வளமாகிவிடும்.