செடி அவரைக்கு இயற்கை உரம் !!
👉 அவரையானது செடி அவரை மற்றும் கொடி அவரை என வகைப்படுத்தப்படுகிறது. செடி அவரையில் பு+ கொட்டும் பாதிப்பு அதிகம் காணப்படும். அதற்கு ஒரு இயற்கை தீர்வு உண்டு. அதைப்பற்றி இங்கு காண்போம்.
தயாரிக்கும் முறை :
🌿 இயற்கை உரம் தயாரிக்க வாழை மரத்தின் பக்கக் கன்றுகள் 5, வெல்லம் அரைக்கிலோ, மூன்று நாட்கள் புளித்த தயிர் அரைலிட்டர், பெருங்காய பொடி 100 கிராம், இரு கையளவு முருங்கை கீரை மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் ஆகியவை தேவைப்படும்.
🌿 முதலில் வாழை மரத்தின் பக்கக் கன்றுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
🌿 பின்னர் வெல்லத்தை நன்கு பொடிசெய்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வாழை மரத்தின் துண்டுகளை போட்டு ஊறவிட வேண்டும்.
🌿 அதன் பின் பெருங்காயத்தூள் மற்றும் முருங்கை கீரையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அவற்றை மூன்று நாள் புளிக்க வைத்த தயிரில் கரைத்து, அதன் பிறகு அதை வெல்லக்கரைசலில் சேர்த்து கலக்கி மூடி வைக்க வேண்டும்.
🌿 பிறகு அடுத்த நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தௌpத்து வந்தால் பு+க்கள் உதிராமல் இருக்கும்.
🌿 வாழை மரம் தனது நுனிப்பகுதியில் பயிருக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியை இரவில் சேமித்து வைத்திருக்கும். வெயில் பட்டால் அவை மரத்தின் அடிப்பகுதிக்குச் சென்று விடும், அதனால் அதிகாலை 5 மணிக்குள் வாழையின் பக்கக் கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
🌿 முருங்கை கீரையில் இரும்புச்சத்து, புளித்த தயிரில் வளர்ச்சி ஊக்கிகள், பெருங்காயத்தில் பு+க்கள் அதிகம் பிடிக்கும் தன்மை போன்ற பயன்கள் உள்ளதால் இது செடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கோரையை கட்டுப்படுத்தும் வழிமுறை !!
👉 வயலில் உள்ள கோரையை அதன் கிழங்குடன் தோண்டி எடுத்து சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
👉 பின்னர் சேகரித்த கோரைக்கிழங்குகளை தீயில் போட்டு எரித்து சாம்பலாக்கி கொள்ள வேண்டும். அந்த சாம்பலை பயிருக்கு நீர்ப்பாசனம் செய்யும்போது கலந்து விட்டால் வயலில் அனைத்து இடத்திற்கும் பரவும்.
👉 இந்த சாம்பல் கலந்த நீரானது நிலத்திற்குள் சென்று வயலில் இருக்கும் கோரைகளை அழித்துவிடுகிறது.
👉 இவ்வாறு செய்தால் மறுமுறை பயிர் செய்யும்போது கோரை தொல்லை இருக்காது.
👉 கோரை கிழங்கின் மூலமாகவே பரவுவதால், கிழங்கு இல்லாத கோரைகளை வரப்பில் போட்டால் நிலத்திற்கு வளமாகிவிடும்.
[2:46 pm, 10/11/2022] PS: நெல் பயிர் இயற்கை முறையில் வளர்ப்பதற்கான அட்டவணை வயது : 130 லிருந்து 135 நாள் வரை
நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(16 லிருந்து 24 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.
ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .
ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம்.
ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம்.
நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 கிலோ சூடோமோனாஸ் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.
நாற்றுக்களை 24 நாளாம் நாட்களுக்குள் நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.
3 ம் நாள்பாசன நீரில் ஜீவாமிர்தம் 100 லிட் கொடுக்கலாம்.
10 வது நாள் -- மீன்அமிலம் தரைவழி நாற்றங்காலுக்கு ஒரு லிட்டர் தரை வழியும் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா தெளித்தும் கொடுக்கலாம்.
18வது நாள் -- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு நாற்றங்காலுக்கு ஒரு லிட்டர் தரைவழி மற்றும் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகவ்யம் கலந்து தெளிக்கலாம்.
22 ஆம் நாள் நடவு.
25 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா பத்து லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம் மாலையில் இஎம் கரைசல் தரைவழி 2 லிட் அல்லது மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 2 லிட் கலந்து கொடுக்கலாம்.
30 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
32 வது நாள் -- கோனோவீடர்(கோனோவீடர் போடும்போது பயிர்களின் இடைவெளியில் உள்ள களைகளை ஆட்களை வைத்து கைகளை எடுக்க வேண்டும்
35 வது நாள காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து கொடுக்கலாம்.
மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 2 லிட் பாசனத்துடன் கொடுக்கலாம்.
45 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
இ.எம் கரைசல் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம்.
55 வது நாள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கலந்து மூலிகை பூச்சிவிரட்டி அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் கொடுக்கலாம் அல்லது 75 மில்லி சீனி கலந்து ஒட்டும் திரவத்துடன் தெளிக்கலாம்.
65 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
75 வது நாள் -- காலை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் தெளிப்பாக தரலாம். மாலையில் இ.எம் கரைசல் தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் கொடுக்கலாம்.
85வது நாள் -- 10 லிட்டருக்கு 500 மில்லி என கலந்து தேமோர் கரைசல் அல்லது 300 மில்லி இஎம் கரைசல் 50 மில்லி சூடோமோனஸ் உடன் கலந்து தெளிக்கலாம்.
ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
90 வது நாள்
10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் தேமோர் கரைசல் அல்லது 200 மில்லி ஈயம் கரைசல் கலந்து தெளிக்கலாம்.
95 வது நாள் -- காலையில் வசம்பு கரைசல் பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் கலந்து தெளிக்கலாம்.
மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 2 லிட். பாசனத்துடன் கொடுக்கலாம்.
102 வது நாள் -- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 2 லிட்.
106வது நாள் -- கற்பூர கரைசல் அல்லது பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் (10 லிட்டருக்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம்.
110 வது நாள் -- பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்கு 2 கிலோ + இஎம் கரைசல் தரைவழி ஏக்கருக்கு இரண்டு லிட்டர் தரைவழி தண்ணீருடன் கலந்து தரவும்.
120 வது நாள் -- காலை சூடோமோனஸ் ஐ பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம். மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு ஒரு லிட்டர் தரலாம் .
நடவு நட்ட ஆரம்ப காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பேஸ்லெஸ் துருஞ்ஜி என்சிஸ் திரவத்தை 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
90 வது நாளிலிருந்து, பூக்கும் நேரம் முதல் மணிகள் மற்றும் நேரம் வரை கதிர் நாவாய் பூச்சி இடம் இருந்து பாதுகாக்க மிளகாய் கரைசல் தெளிக்கலாம் அல்லது மெட்டாரைசியம் என்ற திரவத்தை 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து 4 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
இது போன்ற திட்டமிட்ட பயிர் வளர்ப்பு நமக்கு இரசாயன விவசாயத்தின் விளைச்சலை காட்டிலும் இன் இருமடங்கு இலாபத்தையும், விளைச்சலையும் அள்ளி தரும்.