கால்நடைகளின் உடலில் எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்க.. இத தினமும் கொடுங்க..!

 ❓ இயற்கை பு+ச்சி விரட்டி எப்படி தயாரிக்கலாம்?

🍯 நாட்டு பசு கோமியம், புகையிலை, பச்சை மிளகாய், பு+ண்டு மற்றும் வேம்பு இலை ஆகியவற்றை அரைத்து மண்பானையில் இட்டு கொதிக்க வைத்து, பிறகு மண்பானையை துணியால் மூடி 48 மணி நேரம்

அப்படியே வைத்தால் கிடைக்கும் தௌpந்த நீர் தான் இயற்கை பு+ச்சி விரட்டி.


🍯 இந்த தௌpந்த கரைசல் 150 மில்லியை 1 லிட்டர் மாட்டுச் சிறுநீருடன் கலந்து பயிர்கள் மேல் தௌpத்தால் புழு, பு+ச்சிகள் இறந்து விடும். இது அனைத்து வகையான பயிர்களுக்கும் உகந்தது.


❓ மரவள்ளி கிழங்கை மானாவாரி பயிராக பயிரிடலாமா?


🍗 மரவள்ளி கிழங்கை பாசன வசதி உள்ள இடங்களில் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். மானாவாரியில் பயிரிடுவதாக இருந்தால் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடவு செய்யலாம்.


🍗 செம்மண், கரிசல் மண் மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு மிகவும் உகந்தது. களிமண், வண்டல் மண்ணில் சாகுபடி செய்ய இயலாது. நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்க வேண்டும்.


❓ விவசாயத்தில் சிலந்திகளின் பங்களிப்பு என்ன?


🐞 நன்மை செய்யும் பு+ச்சிகளில் சிலந்தி தான் முதலிடத்தில் இருப்பவை. விவசாய வயல்களில் அதுவும் நெல் பயிரிட்டுள்ள வயல்களில் சிலந்திகள் அதிகம் இருக்கும். 


🐞 சிலந்திகளில் பல ஆயிரம் வகைகள் உள்ளன. காடுகளில் காணப்படும் சில வகை மட்டுமே விஷத்தன்மை உடையது.


🐞 நன்மை செய்யும் பு+ச்சிகளில் சிலந்திகள் அதிக நாட்கள் (மூன்று மாதங்கள்) உயிர் வாழும். நாம் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு தீமை செய்யும் அனைத்து பு+ச்சிகளையும் பிடித்து தின்று விடும்.


❓ கீரைகளில் வண்டுகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதை எப்படி தடுக்கலாம்?


🌿 பொதுவாக கீரை பயிரிட்டுள்ள வயலைச் சுற்றி சாமந்திப்பு+ செடிகளை நடவு செய்யலாம். இவ்வாறு நடவு செய்வதால் கீரைகளைத் தாக்கும் பு+ச்சிகளையும், வண்டுகளையும் சாமந்திப்பு+ அதிகம் கவரும். அதனால் கீரைகளுக்கு பு+ச்சிகளால் அதிகம் சேதம் இருக்காது. 


❓ மாடுகளுக்கு கொடுக்கும் தாது உப்புகளால் ஏற்படும் நன்மைகள் யாவை?


🐂 மாடுகளுக்கு கொடுக்கும் தாது உப்புகளால் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். ஆரோக்கியம், இனப்பெருக்கத்திறன் மேம்படும். நல்ல ஆரோக்கியமான கன்று பிறக்கும்.


🐂 கால்நடைகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறன் பெருகும். கால்நடைகளின் உடலில் எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும். தீவனத்திலுள்ள சத்துப் பொருள்கள் முறையாக பயன்படுத்தப்படும்.


🐂 சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படும். 15 முதல் 18 மாத இடைவெளியில் மீண்டும் கன்று ஈனும் திறன் அதிகரிக்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும்