என்ன... ஒரு ஆட்டிற்கு 10 - 20 மில்லி வரை கொடுத்தால் எடை அதிகமாகுமா..?

 ❓ மல்லிகைச்செடி எப்பொழுது பு+க்க ஆரம்பிக்கும்?

🌼 மல்லிகைச்செடி மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் பு+க்க ஆரம்பிக்கும். செடியை நடவு செய்த முதல் ஆண்டிலேயே பு+ பு+க்க ஆரம்பித்துவிடும்.


🌼 இரண்டாம் ஆண்டிலிருந்து தான் சீரான விளைச்சல் கிடைக்கும். நன்கு வளர்ந்த மொட்டுக்களை அதிகாலையில் பறித்துவிட வேண்டும்.


❓ கத்தரியில் பு+ச்சி தாக்குவதை உயிரியல் முறையில் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?


🍆 செடிகள் நடவு செய்த 15-20 நாட்களில் ஏக்கருக்கு 10 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து பு+ச்சிளை அழித்து விடலாம்.


🍆 வேப்ப எண்ணெய் மற்றும் புங்க எண்ணெய் 3 மில்லியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தௌpக்க வேண்டும்.


🍆 பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 10 மில்லியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒருமுறை தௌpக்க வேண்டும்.


❓ வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு பஞ்சகாவ்யாவை எவ்வளவு கொடுக்க வேண்டும்?


🐐 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் வயதைப் பொறுத்து ஒரு நாளைக்கு ஒரு ஆட்டிற்கு 10 - 20 மில்லி வரை பஞ்சகாவ்யாவை கொடுத்தால் குறுகிய காலத்தில் எடை அதிகமாகி, ஆடுகள் திடமானதாகும்.


❓ நெல்லில் தண்டு அழுகல் நோயை எப்படி கட்டுப்படுத்துவது?


🌾 பஞ்சகாவ்யா கரைசலை தௌpக்கலாம். சு+டோமோனஸ் புளோரசன்ஸை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து தௌpக்கலாம் அல்லது நீர் பாசனத்துடன் ஒரு பாக்கெட் சு+டோமோனஸ் புளோரசன்ஸை கலந்து விடுவதன் மூலம் நெல்லில் தண்டு அழுகல் நோயை சரிசெய்யலாம்.


❓ வீரிய ஒட்டு ரக சாம்பல் பு+சணி (கோ-1) பற்றி கூறுக? 


🍈கோ-1 ரக சாம்பல் பு+சணி பி.ஏ.ஜி 3 மற்றும் கோ 2-ன் வீரிய ஒட்டு ரகமாகும். பயிர் மிதமான கொடிகளை கொண்டது. பழம் நீண்ட மிதமான அளவுடையது. 


🍈 இதன் எடை 4 முதல் 5 கிலோ வரை இருக்கும். பயிரின் வயது 120 முதல் 130 நாட்கள் வரை ஆகும். அதிக மகசு+லாக ஒரு ஹெக்டருக்கு 98 டன் வரை கிடைக்கும்.