நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க.. இதை செய்ய மறக்காதீங்க..! விவசாய துளிகள்...!

 நிலக்கடலையில் அதிக விளைச்சல் பெற வேண்டுமா...!

🍪 நிலக்கடலைக்கு ஒவ்வொரு தடவையும் நீர் பாசனம் செய்யும் போது அமிர்த கரைசல் மற்றும் தேமோர் சேர்ந்த கலவையை தௌpத்து நீர் பாசனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால்

நிலக்கடலையின் தண்டு நல்ல தடினமாக இருக்கும். மானாவாரி நிலத்தில் போதுமான ஈரம் இல்லாவிட்டால் ரசாயன உரங்களை பயிர் கிரகிப்பது கடினம். ஆனால், திரவ வடிவில் இயற்கை உரத்தை கொடுத்தால் நல்ல பலனை தரும்.

பருத்தியில் வெள்ளை ஈ யா...!


🐝 பருத்தியில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வயலின் இடையே துண்டு காகிதங்களில் விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவி வரிசையாக சணல் கொண்டு கட்டித் தொங்க விட வேண்டும். வயலில் 3 முதல் 5 இடங்களில் கட்டித் தொங்க விட்ட பிறகு, காலி பவர் ஸ்பிரேயர் கொண்டு அடிக்கும் போது காற்றின் வேகத்தில் ஈக்கள் பறந்து சென்று காகிதத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இதன் மூலம் 90 சதவீதம் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பொறிகள்...!


மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி :


👉 பழைய எண்ணெய் டின்களின் மேல் மஞ்சள் வண்ணத்தை பு+சி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவி விடவேண்டும். மஞ்சள் வண்ணத்தால் கவரப்படும் பு+ச்சிகளான அசுவினி, தத்துப்பு+ச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் போன்றவை அதன் மேல் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.


விளக்குப் பொறி :


👉 பொதுவாக பு+ச்சிகள் ஒளியை நோக்கிச் செல்லக்கூடியவை. இரவில் மின்சார விளக்கு எரியவிட்டு அதன் கீழ் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சில துளிகள் மண்ணெண்ணெயை விட்டு இரவு 6 மணி முதல் 8 மணி வரை வைக்கவேண்டும், பு+ச்சிகள் இந்த விளக்கொளியில் கவரப்பட்டு பின் தண்ணீரில் விழுந்து மடிகின்றன.


👉 இரவு 8 மணிக்குமேல் நன்மை செய்யும் பு+ச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும், இதனால் 8 மணிக்கு மேல் விளக்கை அணைத்துவிட வேண்டும். இல்லையேல் நன்மை செய்யும் பு+ச்சிகளும் இறந்துவிடும்.