என்ன.. களைகளை கட்டுப்படுத்த மாட்டுக்கோமியமே போதுமா..? எப்படி சாத்தியம்..!

 ❓ சிகப்பு வெண்டை ரகம் பற்றி கூறுக?

🍁 சிகப்பு வெண்டை பாரம்பரிய ரகத்தை சார்ந்தது. வறட்சி மற்றும் ஓரளவு ஈரம் இரண்டையுமே தாங்கி வளரும் தன்மை உடையது. தண்டு சற்று உறுதியாக இருக்கும்.


🍁 கேரள மாநிலத்தில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. சாதாரணமாக பட்டம் என்று வரும்போது இந்த ரகத்தை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம். 


❓ துவரையை நாற்று விட்டு நடவு செய்யும் முறைகளைக் கூறவும்?


🌿 நடவு முறையில் சாகுபடி செய்யப்படும் துவரை பயிரில் நீண்ட கால ரகமே சிறந்தது. இறவையாகவோ அல்லது மானாவாரியாகவோ பயிரிட்டாலும், ஆகஸ்டு மாதத்திற்குள் நடவை முடிக்க வேண்டும்.


🌿 மேலும் 30 முதல் 40 நாள் வயதுடைய நாற்றுகளை 5 அடிக்கு 3 அடி வரிசை இடைவெளியில் 15 செ.மீ. ஆழமுள்ள குழி தோண்டி நடவு மேற்கொள்ள வேண்டும். நடவு செய்த 30 நாட்களுக்குள் நுனியை கிள்ளி எடுப்பதால் பக்கவாட்டு கிளைகள் அதிகம் தோன்றும்.


❓ பு+சணிச் செடியில் நுண்ணு}ட்ட பற்றாக்குறையை எவ்வாறு அறியலாம்?


🍈 செடிகள் மஞ்சள் நிறமாக (அ) வெளிர்பச்சை நிறமாக மாறும். மேலும் செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும். அதோடு பு+க்கள் மற்றும் காய்களும் உதிரும்.


❓ வாழை மரத்திற்கு என்ன இயற்கை உரம் கொடுக்கலாம்?


🌲 சிறுதானியங்களான கம்பு, தட்டைப்பயிர், எள், உளுந்து, துவரை போன்ற பயிர் வகைகளைக் கலந்து விதைத்து மூன்று மாதம் ஆன பிறகு அறுவடை செய்து விட்டு எஞ்சியுள்ள செடிகளை வாழைத்தோட்டத்தில் அவற்றை மடித்து இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.


🌲 வாழைகளுக்கு கோழி எரு, ஆட்டு எரு, மாட்டுச்சாணம், உயிரி உரக்கரைசலைச் சொட்டுநீர் மூலம் கொடுக்கலாம். காய்கள் பருமனாக மோர், எருக்கம்சாறு, மாட்டுச்சாணம், மாட்டுக்கோமியம் கலந்தும் தௌpக்கலாம்.


❓ களைகளை கட்டுப்படுத்த மாட்டுக்கோமியத்தினை எப்படி பயன்படுத்தலாம்?


🐃 மாடுகளின் கோமியத்தினை களை சிறியதாக இருக்கும்போது ஸ்பிரேயர் கொண்டு பயிர்களின் மீது படாமல் களைகள் மீது தௌpக்கலாம். தௌpக்கும் மாட்டுக்கோமியத்தில் தண்ணீர் சிறிதளவு கூட கலக்கக்கூடாது.


🐃 தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு ஒரு டேங்கிற்கு அரை பழச்சாறு சேர்த்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை கூட தௌpக்கலாம்.