❓ துளசி விதைகளை எப்படி விதைக்க வேண்டும்?
🍀 துளசி விதை அளவில் மிகச் சிறியது. நாற்றங்காலில் துளசி விதைகளை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.
🍀 15 அடி அகலம், 4 அடி நீளம் கொண்ட பாத்திகளில் ஏக்கருக்கு 150 கிராம் விதைகளைத் தூவி தண்ணீர் விட்டு ஏழு வாரங்களுக்கு பிறகு வளர்ந்த நாற்றை பிடுங்கி நடவிற்கு பயன்படுத்தலாம்.
❓ பட்டுக்கூடுகளை எப்பொழுது அறுவடை செய்ய வேண்டும்?
🍢 பட்டுப்புழு கூடு கட்டிய ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை முடிந்த பின்னர் புழுவின் கழிவுகள் ஒட்டியுள்ள கூடுகள், இரட்டைக்கூடுகள், நலிந்த கூடுகள் ஆகியவற்றை பிரித்து விட வேண்டும்.
❓ கல் மூடாக்கு என்றால் என்ன?
🍩 மூடாக்கு இடுவதற்கு இலை, தழை, சருகுகள் இல்லாத இடத்தில், அங்கு கிடைக்கும் கற்களை கொண்டு மரக்கன்றுகளுக்கு மூடாக்கு போடலாம். இதற்கு கல் மூடாக்கு என்று பெயர்.
🍩 இவ்வகை மூடாக்கு மண்ணிலிருந்து ஈரம் ஆவியாவதைத் தடுத்து நிலத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கின்றது.
❓ தேங்காய்ப்பால் மோர்க்கரைசல் எப்படி தயாரிப்பது?
🍯 ஏக்கருக்கு 5 லிட்டர் தேங்காய்ப்பால் மற்றும் 5 லிட்டர் மோர்க்கரைசல் ஆகிய இரண்டையும் சேர்த்து பானையில் ஊற்றி குப்பைமேடு அல்லது குழிகளில் புதைத்து வைக்க வேண்டும்.
🍯 இக்கரைசல் ஒரு வாரத்தில் நொதித்து நல்ல வளர்ச்சி ஊக்கியாக மாறும். இந்த வளர்ச்சி ஊக்கி ஒரு லிட்டரை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தௌpக்க வேண்டும்.
❓ மரவள்ளி திப்பியை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாமா?
🐃 மரவள்ளி திப்பியில் 4 விழுக்காடு புரதம் மற்றும் 30 விழுக்காடு நார்பொருட்கள் அடங்கியுள்ளது.
🐃 ஈர திப்பியை 3 முதல் 5 கிலோ வரை கால்நடைகளுக்கு அளிக்கலாம் அல்லது உலர்த்திய திப்பியை 30 விழுக்காடு வரை கலப்பு தீவனத்தில் த் கலந்து அளிக்கலாம்.