எள் சாகுபடியில் அதிக மகசு+ல் பெறும் முறை...!
ரகங்கள்
🌱 ஐப்பசி மாதத்தில் எள் சாகுபடி செய்ய ஏசுஐ 2இ3இ வுஆஏ 7 போன்ற ரகங்கள் உகந்தவை.
விதைப்பு
🌱 விதை அளவு மற்றும் பயிர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஏக்கருக்கு 2 கிலோ எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 1.5 கிலோ விதையை வரிசை பயிராக விதைக்க வேண்டும்.
நீர் பாசனம்
🌱 எள்ளிற்கு குறைந்த நீர் பாசனம் போதுமானது.
🌱 எள் செடி முளைத்து 5 இலை விடும் பொழுது ஒருமுறையும், பிறகு பு+, காய் தோன்றும் பொழுது ஒருமுறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
🌱 எள்ளிற்கு மண்ணின் தன்மையை அறிந்து கொண்டு குறைந்த நீர் பாசனம் செய்வதே சிறந்தது.
வளர்ச்சி ஊக்கிகள்
🌱 பயிர் ஊக்கிகளின் பற்றாக்குறையினால் பு+ பு+க்காமை இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய தேமோர் கரைசல் அல்லது கற்பு+ரக் கரைசல் தௌpக்கலாம்.
அறுவடை
🌱 எள் பயிரை தக்க காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். தண்டின் அடிப்பாகத்தில் இலைகள் மஞ்சள் நிறமாகவும், தண்டின் மத்திய பாகம் வரை காய்கள் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். தண்டின் கீழ் பாகத்தில் இருந்து 10வது காயை உடைத்து பார்த்தால் நிறம் மாற்றம் காணப்படும். அந்த சமயத்தில் செடிகளை அடியோடு அறுத்து, பிறகு செடிகளை வட்டமாக ஒன்றின் மீது ஒன்றாக தண்டு வெளியில் தெரியும் படி அடுக்க வேண்டும். பிறகு வைக்கோல் கொண்டு மூடி விட வேண்டும். அதன்பின் 5ம் நாள் செடிகளை வெயிலில் காயவைத்து உலுக்கி எள்ளினை பிரித்தெடுக்க வேண்டும்.
👆 இத்தகைய சில தொழில்நுட்ப முறைகளை கையாண்டால் எள் சாகுபடியில் அதிக மகசு+ல் பெறலாம்..