தேனீ வளர்ப்பில் உள்ள சில தொழில்நுட்பங்கள்..!
விவசாயத்தின் உபதொழிலாக ஆடு, கோழி, காடை, முயல், வாத்து உள்ளிட்ட பல கால்நடைகள் வளர்ப்பு தொழில்கள் உள்ளன. அதில் தேனீ வளர்ப்பும் அடங்கும்.. தேனீ வளர்ப்பதால் விவசாயத்தில்
மகரந்தச்சேர்க்கை நிகழ்ந்து மகசு+ல் அதிகம் கிடைக்கும்.. அதேபோல் தேன் மூலமும் வருமானம் ஈட்டலாம்.. அப்படிபட்ட தேனீ வளர்ப்பில் சில செயல்கள் முறையாக செய்ய வேண்டும். அது பற்றி இங்கு இருவர் பேசிக்கொள்கிறார்கள் வாங்க அறிந்து கொள்ளலாம்..மருது : வணக்கம்.. எப்படி உள்ளீர்கள்?
கார்த்திக் : நான் நன்றாக இருக்கிறேன்..
மருது : நல்லது.. நான் வரும் வழியில் உங்கள் தென்னந்தோப்பை பார்த்தேன்.. அங்கு சில பெட்டிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. அது என்ன பெட்டி?
கார்த்திக் : அது தேனீப்பெட்டி..
மருது : தேனீப்பெட்டியா? தென்னந்தோப்பில் அது எதற்கு?
கார்த்திக் : உங்களுக்கு தெரியாததா? தேனீக்களினால் தானே மகரந்தச்சேர்க்கை நிகழும்.. மகசு+லும் அதிகரிக்கும்..
மருது : அதுவும் சரி தான்.. ஆமாம் தேனீ வளர்ப்பை பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா?
கார்த்திக் : ஓ தெரியுமே..
மருது : அதை பற்றி எனக்கும் கூறுங்கள்?
கார்த்திக் : சரி.. தேனீ வளர்ப்பில் சில செயல்களை பின்பற்ற வேண்டும். அதேபோல் சில செயல்களை தவிர்த்தலும் வேண்டும்..
மருது : அப்படியா? எந்தெந்த செயல்களை பின்பற்ற வேண்டும்?
கார்த்திக் : தேனீப்பெட்டிகளை நிழல் அதிகமுள்ள இடத்தில் வைக்க வேண்டும். மலர்கள் அதிகமாக உள்ள இடத்தில் பெட்டியை வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் திறந்து பார்த்தால் போதுமானதாக இருக்கும். தேனீ வளர்ப்பு பெட்டியின் அடிப்பாகத்தில் மெழுகு இருக்கிறதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். தேனீ பெட்டியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இரவில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். பெட்டியை திறந்து பார்க்கும்போது பக்கவாட்டிலிருந்துதான் திறக்க வேண்டும். இல்லையென்றால், தேனீ கொட்டிவிடும் சாத்தியம் உண்டு. வண்ணத்துப்பு+ச்சிகள், தேனீப்பெட்டியில் முட்டையிட்டால், அது தேனீப்பெட்டியைப் பயனற்றதாக மாற்றிவிடும். தேனீக்கள் எல்லாம் வெளியேறிவிடும். எனவே வண்ணத்துப்பு+ச்சி முட்டையிட்டிருந்தால், அதை தேங்காய் நார் கொண்டு தேய்த்து அகற்றிவிடலாம்.
மருது : அற்புதமான தகவல்.. அப்போ எந்தெந்த செயல்களை எல்லாம் செய்யக்கூடாது?
கார்த்திக் : நமது வாசனையை தேனீக்கள் நினைவில் வைத்திருக்கும். எனவே, தேனீப் பெட்டிக்கு அருகில் செல்லும்போது, உடலில் வாசனை திரவியங்களின் நெடி அதிகமாக இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் தேனீ கொட்டிவிடும். நீர் தேங்கும் இடத்தில் தேனீப்பெட்டியை வைக்கக்கூடாது. அதேபோல எறும்பு அதிகமுள்ள இடத்திலும் வைக்கக்கூடாது. தேனீப்பெட்டியை அடிக்கடி திறந்து பார்க்கக்கூடாது. அதேபோல தேனீப்பெட்டியின் இடத்தையும் மாற்றக்கூடாது.
மருது : இந்த மாதிரி பல தொழில்நுட்பங்களை நீங்கள் அறிந்துள்ளதால் தான் விவசாயத்தில் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறீர்கள்.. இதேபோல் உங்கள் பயணத்தை தொடர வாழ்த்துகிறேன்.. சரி நான் சென்று வருகிறேன்..!