பூஞ்சாண விதை நேர்த்தி
பயிர் சாகுபடியில் முக்கிய அம்சமாக விதைப்பு உள்ளது. சரியான பருவத்தில், சரியான இடைவெளியுடன், சரியான
வழிமுறைகளைப் பின்பற்றி, தரமான விதைகளை விதைப்பு செய்வதன் மூலம் நல்ல மகசு+ல் ஈட்ட முடியும்.🍃 அதேநேரத்தில் விதைகள் மூலம் பரவக்கூடிய பு+ஞ்சாண நோய்களிலிருந்து பாதுகாக்க பு+ஞ்சாண விதை நேர்த்தி அவசியமாகிறது.
🍃 டிரைக்கோடெர்மா விரிடி என்னும் உயிரியல் பு+ஞ்சாணக் கொல்லியை விதைகளுடன் கலந்து பு+ஞ்சாண விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்கலாம்.
🍃 அதிக அளவில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பு+ச்சிக் கொல்லிகளால் மண்ணிலுள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் பெருமளவு அழிந்துவிட்டன.
🍃 இந்த நிலையில் டிரைக்கோடெர்மா விரிடி மூலம் விதை நேர்த்தி செய்யும்போது அவை விதைகளின் துவாரங்களில் பொருந்தி பயிருடன் இணைந்து வளர்கிறது.
🍂 இதன் மூலம் வேர் அழுகல், தண்டு அழுகல் உள்ளிட்ட நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி போதுமானதாகும்.
🍂 உயிரி விதை நேர்த்தி செய்வதன் மூலம் உரச் செலவை பெருமளவு குறைக்க முடியும். உதாரணமாக விளைநிலத்தில் இடும் பாஸ்பேட் எனப்படும் மணிச்சத்தில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் மட்டுமே பயிர்களால் கிரகிக்க முடிகிறது.
🍂 மீதமுள்ளவை நிலத்திலேயே தங்கி விடுகிறது. இவ்வாறு கரையாமலிருக்கும் சத்துக்களைக் கரைத்துக் கொடுக்க உயிர் உர நேர்த்தி உதவுகிறது.
🍂 ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை சோறு வடித்த கஞ்சியுடன் கலந்து உயிர் உர விதை நேர்த்தி செய்யலாம். இந்த வகை விதை நேர்த்தியை விதைப்புக்கு அரை மணி நேரம் முன் செய்வது சிறந்த பலன் தரும்.