விவசாய கேள்வி - பதில்கள்...!

 வேப்பங்கொட்டைக் கரைசலை மாலையில் தெளிக்க இதுதான் காரணமா.? தெரியாம போச்சே..!

❓ புடலையில் விதை நேர்த்தி எவ்வாறு செய்யலாம்?


🍐 1 கிலோ விதைக்கு தலா 4 கிராம் அசோஸ்பைரில்லம், சு+டோமோனஸ், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், டிரைக்கோடெர்மா விரிடி 30 மில்லி பஞ்சகாவ்யா ஆகியவற்றைக் கலந்து அதில் புடலை விதையை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு கலக்கி 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு நிழலில் உலர வைத்து பின் விதைக்கலாம்.


❓ தாவரங்களில் பு+ச்சிகளால் பரவும் நோயின் அறிகுறிகள் என்ன?


🐞 பு+ச்சிகள் மூலம் நச்சுயிரிகள் பயிர்களில் பரவியவுடன் அவைகள் இலைகளில் உள்ள பச்சையம் உற்பத்தியைக் குறைக்கிறது.


🐞 இதனால் இலைகள் பச்சையம் இல்லாமல் வெளுத்துக் காணப்படும். மஞ்சள் வண்ணத்திலும், பழுப்பு நிறத்திலும் தேமல் போன்று காணப்படும். சில சமயம் சிவப்பு நிறமாகவும் இலைகள் மாறிவிடும்.


🐞 சில இடங்களில் திசுக்கள் இறந்துவிடும். மேலும் இலைகள் சிறுத்தும், உருமாற்றம் பெற்றும் காணப்படும். இலைகள் சுருண்டும், குடைபோன்று வளைந்தும் காணப்படும்.


🐞 சில சமயங்களில் பயிரின் வளர்ச்சி பாதித்து குட்டையாகக் காணப்படும். சில சமயங்களில் மலர்கள் மலட்டுத்தன்மையுள்ளதாக மாறிவிடும்.


❓ வேப்பங்கொட்டைக் கரைசல் ஏன் மாலையில் தௌpக்க வேண்டும்?


🚿 வேப்பங்கொட்டைக் கரைசல் மாலையில் 3.30 மணிக்கு மேல் அடிக்கும்போது, அதன் ஆல்கலாய்டுகள் இலையில் நன்கு ஒட்டிக்கொள்கிறது. 


🚿 காலையில் கரைசலை தௌpத்தால் கரைசலில் உள்ள ஆல்கலாய்டுகள் சு+ரிய ஒளியினால் அழிந்து விடுகிறது. இதனால் வேப்பங்கொட்டைக் கரைசல் அடித்ததற்கான பலன் இல்லாமல் போகும்.


❓ அக்னி அஸ்திரம் என்றால் என்ன?


🍯 புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலை, பசுமாட்டுக்கோமியம் ஆகியவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.


🍯 பயிர்களில் காய்ப்புழு, தண்டுத்துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் பயன்படுத்தப்படுகிறது. அக்னி அஸ்திரம் எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.


❓ சில பசுக்கள் எப்பொழுதும் சினையாவதில்லை. இதற்கான காரணம் என்ன? 


🐃 சரியான நேரத்தில் கருவு+ட்டல் செய்தல் வேண்டும். அதாவது, சினை தருணம் வெளிப்பட்ட 12 மணி நேரம் கழித்து கருவு+ட்டல் செய்தல் நல்ல ஆரோக்கியமான, நோய்கள் பாதிப்பில்லாமல் பராமரிக்கப்பட வேண்டும்.


🐃 இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனைகள் அதாவது, கர்ப்பபைகளில் நோய்கள், ஹhர்மோன் பிரச்சனைகள், கருமுட்டைகள் உருவாகுதலில் பிரச்சனைகள் போன்ற காரணங்கள் சினைபிடிக்காமைக்கான காரணங்களாகும்.


🐃 இத்தகைய பிரச்சனைகளை கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு அறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள் செய்திடுதல் நன்மையைத் தரும்.