பயிர்களுக்கு அளிக்க 10 நாட்களில் பயிர் ஊக்கி ரெடி..!

 சர்க்கரைவள்ளிக்கிழங்கின் பயன்கள் !! 

🍠 நம்முடைய உணவுப்பழக்கத்தில் பல்வேறான காய்கறிகள், பழங்கள், கீரைவகைகள் மற்றும் கிழங்கு வகைகள் உள்ளன. அந்த உணவுப்பொருட்கள் நமக்கு எவ்வளவு நன்மைகள்

அளிக்கின்றன என நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் ஒரு கிழங்கு வகையைச்சேர்ந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கின் சிறப்புகள் பற்றி இங்கு காண்போம்.


🍠 கிழங்குகள் என்றாலே மாவுச்சத்து நிறைந்து காணப்படும். அதாவது சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் மாவுச்சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கவல்லது. அதுமட்டுமல்லாமல் இந்த கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள் என அனைத்து சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.


🍠 இந்த கிழங்கில் பல வகையான ஸ்டார்ச் சத்து காணப்படுகிறது. இதை உண்பதால் இதயத்தின் செயல்திறன் நன்றாக இருக்கும்.


🍠 சர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கை குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த கிழங்கை உண்பதால் சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.


🍠 இந்த கிழங்கு வைட்டமின் ஏ சத்து கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் நரம்பு செயல்பாடுகளை நன்றாக வைத்திருக்கும்.


🍠 இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. அதாவது நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.


🍠 மேலும் இந்த கிழங்கில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

முட்டை அமிலம் தயாரிப்பு முறை !!


🌿 பயிர்களுக்கு இயற்கை வளர்ச்சி ஊக்கியாக பல்வேறு கரைசல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன், அந்த வகையில் முட்டை அமிலம் தயாரிக்கும் முறை பற்றி இங்கு காண்போம்.


🌿 முட்டை அமிலம் தயாரிக்க 5 முட்டை, 250 கிராம் வெல்லம் மற்றும் 10 முதல் 15 வரையிலான எலுமிச்சை பழங்களின் சாறு ஆகியவை தேவைப்படும்.


தயாரிக்கும் முறை : 


🍃 எடுத்துக்கொண்ட முட்டையை அப்படியே ஒரு குவளை அல்லது ஜாடியில் போட்டு, எலுமிச்சை சாற்றை அந்த முட்டை மூழ்கும் வரை ஊற்றி 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து, அந்த முட்டைகளை உடைத்து, எலுமிச்சை சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.


🍃 பிறகு அதனுடன் வெல்லத்தை சேர்த்து, மேலும் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து, பயிர்களுக்கு அளிக்கலாம்.


🍃 2 மில்லி அளவு கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு அளிக்கலாம்.


🍃 இதனால் பயிர்களுக்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றன, மேலும் பயிர்களின் வளர்ச்சியையும் இந்த கரைசல் அதிகப்படுத்துகிறது.