பயிர் கழிவுகளை எளிதாக உரமாக மாற்றலாம்.. இதை மட்டும் செஞ்சி பாருங்க!!

 கோழிக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தும் மூலிகை சிகிச்சை!!


🐔 நாட்டுக்கோழிகளுக்கு, தீவனம், காற்று, குடிநீர் ஆகியவை வாயிலாக வெள்ளை கழிச்சல் நோய் பரவும் தன்மை கொண்டது.

வெள்ளை கழிச்சல் தாக்கிய கோழிகள் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில், கழிவுகளை வெளியேற்றும். சில நேரங்களில் கோழிகள் இறக்கவும் நேரிடும்.


🐔 இதை தவிர்க்க, மூலிகை மருத்துவ முறையில், கோழி கழிச்சல் நோயை கட்டுப்படுத்தலாம். ஒரு ஸ்பு+ன் மஞ்சளை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கோழிகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். 


🐔 10 கிராம் சீரகம், 5 கிராம் மிளகு இடித்துக் கொள்ள வேண்டும். இதுதவிர, 10 கிராம் சின்ன சீரகம், 50 கிராம் கீழாநெல்லி, ஐந்து சிறிய வெங்காயம், 5 கிராம் மஞ்சள் துhள், ஐந்து பல் பு+ண்டு ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். இடித்து வைத்த கலவை மற்றும் அரைத்து வைத்ததை கலந்து, தீவனம் அல்லது அரிசியில் கலந்து கொடுக்கவும்.


🐔 குறிப்பாக, கழிச்சல் நோய் தாக்கிய கோழிகளின் எச்சம், தீவனம் மற்றும் தண்ணீரில் விழாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கும் கட்டுப்படவில்லை எனில், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.


ஆடு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு, பண்ணை அமைக்கும் முறை, நோய் மேலாண்மை, விற்பனை அனைத்தும் அடங்கிய புத்தகம்... 


பயிர் கழிவுகளை பண்ணை உரமாக்கும் முறை!


🍃 பயிர் கழிவுகளை ஒரு சில விவசாயிகள் சாணக்குவியல் போட்டு ஓரளவு மக்க வைக்கின்றனர். பெரும்பாலும் முழுமையாக பயன்படுத்துவது இல்லை. 


🍃 மேலும் சாணம், மாட்டின் சிறுநீர், பயிர் கழிவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்துதல் அவசியமாகும். 


🍃 பயிர் கழிவுகள் கிடைக்கும் காலங்களில் அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி அவற்றுடன் பண்ணை கழிவுகள் மற்றும் மரச்சருகுகள் ஆகியவற்றை நிழற்பகுதியில் 3 அடி ஆழமுள்ள குழிகளில் பல அடுக்குகளாக பரப்பி சாணக்கரைசலை மாட்டின் சிறுநீருடன் கலந்து ஒவ்வொரு அடுக்கிலும் சீராக தௌpத்த நீர் வடியாத அளவில் போதிய ஈர நிலையில் பராமரிக்க வேண்டும். 


🍃 இடையில் ஒருமுறை கலைத்து ஈரப்படுத்தி திரும்ப குவிப்பதன் மூலம் மக்கும் தன்மையை அதிகரிக்க முடியும். 


🍃 மேலும் 3-4 மாதங்கள் நன்கு மக்கிய தொழு உரமாகவும், நுண்ணு}ட்டங்கள் கலந்த உரமாகவும் பயன்படுத்தலாம்.