கால்நடை வளர்ப்பவர்களுக்கான எளிய டிப்ஸ்.! மாடு வளர்ப்பு டிப்ஸ்..!

 கால்நடைகளுக்கு ஏற்படும் வெக்கை நோயின் அறிகுறிகள்...


🐄 கால்நடைகளுக்கு வெக்கை நோயால் அதிக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சாணம் நாற்றம் அடித்தல், உடல் மெலிதல், கண், மூக்கு,

வாய் வழியே நீர் வடிதல், உதடுகளின் உள்புறம் நாக்கின் அடிப்பாக பகுதிகளில் புண்கள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.


கன்றுகளுக்கு தீவனம் கொடுத்து பழக்கும் முறை...


🐃 கன்றுகளுக்கு கம்பு, சோளம், கேழ்வரகு, உடைத்த கோதுமை, அரிசி போன்ற தானியங்களை அரைத்து கலந்து கொடுக்கலாம்.


🐂 சில வாரங்களுக்குப் பிறகு தாய்ப்பால் ஊட்டத்தை நிறுத்திவிட வேண்டும். அடர் தீவனத்தை பால் ஊட்டிய பின்பு கன்றுகளுக்கு கொடுக்க வேண்டும்.


🐄 பின்பு கன்று அதை சாப்பிட்டு பழகிவிடும். கன்று வளர வளர தானியங்களின் விகிதத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.


கால்நடைகளுக்கு கருப்பை ஒவ்வாமை உண்டாவது....


🐃 கன்று ஈன்ற கால்நடைகளுக்கு கருப்பை வாய்வழியாக நுண்ணுயிர் நோய் தொற்று ஏற்படுவதால் கருப்பை ஒவ்வாமை உண்டாகிறது. இதனால் கருப்பை வாய்வழியாக துர்நாற்றமுள்ள சீழ் வடியும்.


கால்நடைகளுக்கு சினை நிற்காமல் போவதற்கான சிகிச்சை...


🐂 கால்நடைகளின் சத்து பற்றாக்குறைக்கு, பு+ச்சிக்கொல்லி நஞ்சு தௌpத்த வைக்கோல், இரசாயன உப்பு போட்டு வளர்த்த சோளத்தட்டை போன்றவைகள் முக்கிய காரணமாகும்.


🐄 இதற்கு முளைக்கட்டிய நாட்டு கம்பு அல்லது சுண்டல் கடலை தினசரி ஒரு கிலோ வரை 10 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். சோற்றுக்கற்றாழை மடலை 4-5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். துவர்ப்பு சுவைக் கொண்ட (மாதுளம் பழம்) பட்டைகளை 10 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.


🐃 பத்து நாட்களுக்கு பிறகு குடல் புழு நீக்க வேப்பெண்ணெய் சுமார் 100-200 மில்லியை 1-3 நாட்கள் கொடுக்க வேண்டும். பிறகு கருவு+ட்டல் செய்வதனால் சினை பிடிக்கும்.


கால்நடைகளுக்கு மூக்கில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு...


🐂 கண்டங்கத்திரி விதையை எடுத்து தூளாக்கி 50 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து மாட்டின் மூக்கில் மூன்று நாட்கள் பிழிந்து விட புரையேறுதல் மற்றும் பிற காரணங்களினால் ஏற்படும் புண் குணமாகும்.


🐄 மூக்கடைப்பானுக்குக் கண்டங்கத்திரிச்சாற்றை, மாடுகளின் மூக்கில் 2 அல்லது 3 சொட்டுகள் விட வேண்டும்.


கறவை மாடுகளுக்கு கொடுக்கும் தீவனங்கள்....


🐃 கறவை மாடுகளுக்குத் தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனமும், உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம்.


🐂 கறவை மாட்டின் தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே 2.5 லிட்டருக்கு மேல் பால் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் 1 கிலோ கலப்புத் தீவனம் கட்டாயம் அளிக்க வேண்டும்.