❓ நிலக்கடலை பயிரை பு+ச்சிகள் மற்றும் சில நோய்களின் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்?
🍂 நிலக்கடலையில் விதை, மண் மூலம் பரவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்த உயிரியல் பு+ஞ்சாண மருந்தான டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சு+டோமோனஸ் கொண்டு
விதை நேர்த்தி செய்ய வேண்டும்.🍂 இலைகளின் பச்சையத்தை சுரண்டி சேதம் விளைவிக்கும் சுருள் பு+ச்சியை எளிதான முறையில் கட்டுப்படுத்த, நிலக்கடலை வயலை சுற்றிலும் அல்லது ஊடுபயிராக தட்டைப்பயிறு மற்றும் உளுந்து பயிர்களை பயிரிட வேண்டும்.
❓ நெல் கதிர்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இதை எவ்வாறு சரிசெய்யலாம்?
🌾 சாறு உறிஞ்சும் பு+ச்சிகள் சாறை உறிஞ்சிவிடுவதனால் கதிர்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
🌾 மஞ்சள் நிற ஒட்டும் பொறியை வயலில் ஏக்கருக்கு 6 இடத்தில் கட்டி தொங்கவிட வேண்டும்.
🌾 மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விளக்கு பொறிவைத்து பு+ச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
🌾 வாரம் ஒருமுறை பஞ்சகாவ்யா கரைசலை தௌpப்பதன் மூலமும் இப்பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.
❓ வயலில் உள்ள எலிகளை அழிக்க ஏதேனும் வழி உள்ளதா?
🐁 எலி எண்ணிக்கையைக் குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப் பின்பும், எலி வலையைத் தோண்டி எலிகளை அழிக்க வேண்டும்.
🐁 எலியை அழிக்க ஒரு பெரிய வட்ட வடிவமான மண்பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்க வேண்டும்.
🐁 அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிட வேண்டும். ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.
❓ கூன் வண்டு வாழையில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதை எவ்வாறு தடுக்கலாம்?
🌲 வாழையை நடுவதற்கு முன்னால் ஒரு குழிக்கு ஆமணக்கு புண்ணாக்கு 250 கிராம் இடுவதால் கூன் வண்டின் தாக்குதலை தடுக்கலாம்.
🌲 இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு 2 என்ற விகிதத்தில் வைப்பதால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
🌲 காய்ந்த இலைகள் மற்றும் சருகுகளை அவ்வப்போது அகற்றுவதன் மூலமாக வண்டுகள் பெருகுவதை தவிர்க்கலாம்.
🌲 வண்டு தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகளில் அடர் நடவு முறையை தவிர்த்தல் சிறந்ததாகும்.
🌲 ஆமணக்கு புண்ணாக்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு கலவையை ஒரு வாழைக்கு 500 கிராம் வைப்பதன் மூலம் வண்டின் தாக்குதலை குறைக்கலாம்.
❓ தீவனச்சோளம் இளம் செடியாக அதாவது 2 அடி உயரம் உள்ளது. அதை அறுத்து மாட்டுக்கு கொடுக்கலாமா?
🍁 பு+க்கள் வெளிவரும் சமயத்தில் தான் மாட்டிற்கு தீவனச்சோளத்தை அறுவடை செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் மாட்டிற்கு சொக்கிக் கொள்ளும்.