உங்க மாமரத்தின் காய் பிடிப்பு அதிகரிக்க.. சூப்பர் வழி..!
❓ செடிகளுக்கு பு+க்கள் மற்றும் காய்ப்புத்திறன் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
🌺 200 லிட்டர் தண்ணீர், 10 லிட்டர் கோமியம், 100 கிராம் பெருங்காயம், 5 கிலோ சாம்பலை நீரில் கரைத்து வடிகட்டி இவை நான்கையும் ஒன்றாக கலந்து 48 மணி நேரம் நிழல் பாங்கான இடத்தில் வைத்து மறுநாள் செடிகளின் மீது தௌpத்து வருவதால் அதிக பு+க்களும், காய்ப்பு திறனும் அதிகரிக்கும் மேலும் சிறந்த பு+ச்சிவிரட்டியாக செயல்படும்.
❓ மாமரத்தின் காய்பிடிப்பு அதிகரிக்க என்ன உரம் வைக்க வேண்டும்?
🌳 தேமோர் கரைசல் என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை வாரம் இரண்டு முறை தௌpக்கவேண்டும். இவ்வாறு தௌpப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்கும்.
🌳 பிப்ரவரி மாதத்தில், பு+ பு+க்காத மரங்களுக்கு வேர்களின் பக்கவாட்டில் வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரத்தை வைத்து நன்றாக மண் அணைத்து விட வேண்டும்.
❓ வயலில் நன்கு மக்கிய உரத்தை இடுவதால் என்ன பயன்?
🌰 மக்கிய உரத்தை இடுவதால் நிலத்தின் மண் பொலபொலப்பாகி பயிர்கள் இலகுவாக வளர உதவுகிறது.
🌰 மண்ணில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பெருக்குகிறது.
🌰 மண்ணின் வளத்தை அதிகரித்து பயிருக்கு தேவையான காற்றோட்டமும், வேர்களுக்கு உகந்த சு+ழலை ஏற்படுத்துகிறது.
🌰 கழிவுப் பொருட்கள் நிலத்தில் மக்கும் போது களைகளும், நோய்க்கிருமிகளும் அழிக்கப்படுகின்றன.
❓ மரமணு மாற்றப்பட்ட விதைகள் என்றால் என்ன?
🍉 மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்றால் இரு பயிர்களின் கலப்பு விதை அல்ல. ஒரு பயிரும், ஒரு நுண்ணுயிரியின் மரபணுவை சேர்த்து உருவாக்கப்பட்டவை.
🍉 மரபணு மாற்றப்பட்ட விதைகள் முளைக்கும் திறன் அற்றது. அதாவது அதை மறுமுறை விதைத்தாலும் வளராது.
❓ மாட்டின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க இயற்கை வழிமுறை ஏதேனும் உள்ளதா?
🍻 ஆமணக்கு இலையினை அரைத்து மடியின் மீது வாரத்திற்கு மூன்று முறை காலை மற்றும் மாலை வேலையில் பு+சிவிட பால் உற்பத்தியை அதிகரிக்கும்.
🍻 ஆமணக்கு இலையை சுடுத்தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரினை மடியின் மீது காலை மற்றும் மாலை என இருவேளையும் தௌpத்துவிட மடியில் உள்ள பால் நரம்புகள் புத்துணர்வுப் பெற்று பால் அதிகரிக்கும்.