ஊடுபயிர் சாகுபடி !!
🌿 முதன்மை பயிருடன், பிற பயிர்களை கலந்து சாகுபடி செய்யும் முறையே ஊடுபயிர் சாகுபடி ஆகும்.
🌿 ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியும், மேலும் கால்நடைகளுக்கு வறட்சி காலங்களில் தீவனத்தையும் உற்பத்தி செய்யலாம்.
🌿 நிலக்கடலையுடன் சோளம், துவரை போன்ற பயிர்களையும், பருத்தியுடன் பயறுவகை பயிர்கள், துவரை, கொத்தவரை பயிர்களையும், சோளத்துடன் தட்டைப்பயறு, அவரை போன்ற பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
நுனிகிள்ளுதல் !!
அதிக வளர்ச்சியை கட்டுப்படுத்தி வீணாகும் சத்துக்களை காய்களுக்கு கிடைக்க செய்வதே நுனிக்கிள்ளுதல் எனப்படுகிறது.
பொதுவாக துவரை, பருத்தி போன்ற பயிர்களில் நுனிக்கிள்ளுதல் முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பக்க கிளைகள் அதிகமாவதுடன், காய்களின் எடையும் அதிகரிக்கின்றன.
வேளாண் பழமொழி !!
🍃 நம் முன்னோர்கள் விவசாயத்தை கருத்தில் கொண்டு பல்வேறான பழமொழிகளை கூறியுள்ளனர். அவற்றிற்கு ஒரு விதமான விளக்கமும் உள்ளது.
🍃 அந்த வகையில் உபயோகப்படுத்தப்படும் வேளாண் பழமொழி...
'உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்"
இந்த பழமொழியின் விளக்கம்...
🍃 அனைவரும் விவசாயம் செய்கின்றபோது விவசாயம் செய்ய வேண்டும்.
🍃 அப்பொழுது தான் அது நன்கு விளைந்து அதிக மகசு+ல் கொடுக்கும்.
🍃 அவ்வாறு செய்யாமல் பலனை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது.
🍃 இதுவே இந்த பழமொழியின் சிறந்த விளக்கமாகும். இதை கருத்தில் கொண்டே முன்னோர்களும் இந்த பழமொழியை கூறியுள்ளனர்.