1. தசை வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
2. தசைகளிலும் உடலின் ரசாயன நீர்களிலும், காரஅமிலத் தன்மையை நிலை நிறுத்தப் பயன்படுகிறது.
3. தோல், கால்குளம்புகள் மற்றும் கொம்புகளின் வளர்ச்சிக்கும் தேவையாக உள்ளன.
4. எலும்புகளிலும், இருதயத் தசைகள் மற்றும் முக்கியத் தசைகளிலும் முக்கியப் பொருளாக பயன்படுகிறது.
5. நொதிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் உற்பத்திக்கு இன்றியமையாததாக உள்ளன.
6. நிணநீர் மற்றும் ரத்தின் நடுநிலைத்தன்மையை காக்க உதவுகிறது.
7. நரம்பு மண்டல வேலைப்பாடு ஊக்குவிப்பு மற்றும் ரத்த உறைதலுக்கு உதவுகிறது
8. தீவனப் பொருள்கள் செரிமானம் மற்றும் சத்துக்கள் உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது
9. கால்நடைகளின் சினைப்பருவ சுழற்சிக்கும், விந்து உற்பத்திக்கும், பால் சுரப்புக்கும், தாது உப்புக்களின் தேவை அவசியம்.
10. தாமிரம், துத்தநாகம், கோபால்ட், இரும்பு, மாங்கனீசு, அயோடின், செலீனியம் போன்ற தாதுக்கள் கால்நடைகளுக்கு மிகக்குறைந்த அளவே தேவைப்படுகின்றன.
11. இந்த தாதுக்கள் அனைத்தும் கால்நடைகளில் இனைப்பெருக்கத்திற்கு பெரிதும் தேவைப்படுகின்றன.
12. இத்தாதுக்கள் அனைத்தும் உடலில் உள்ள பல வகையான நொதிப்பொருட்களை ஊக்குவித்து அவற்றின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கின்றன.
13. இத்தாதுக்களின் பற்றாக்குறை ஏற்படின் நொதிப் பொருள்களின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள்:
1. கால்நடைகளின் முழுவளர்ச்சி பாதிக்கப்படும்.
2. குட்டி ஈன்ற கால்நடைகளின் பால் உற்பத்தி குறையும்.
3. கால்நடைகள் சீரான இடைவெளியில் சினைக்கு வராமை மற்றும் சினை தரிக்காமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
4. சினையான கால்நடைகள் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
5. சில நேரங்களில், குட்டிகள் இறந்து பிறக்கவும் வாய்ப்புள்ளது.
தகவல்: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்