விவசாய கேள்வி - பதில்கள்...!

 தேனீக்களில் உள்ள வகைகள் பற்றி நீங்களும் இங்கே தெரிஞ்சுக்கோங்க..!

❓ நெல் விதையை விதை நேர்த்தி செய்வது எவ்வாறு?

🌾 ஒரு கிலோ நெல் விதையை, 30 மில்லி ஜீவாமிர்த கரைசலில் கலந்து விதைக்கலாம்.


❓ வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு உயிர்வேலியாக என்னென்ன செடிகளை வளர்க்கலாம்?


🌱 கொட்டைச்செடி (ஆமணக்கு), கள்ளி, அகத்தி, சுபாபுல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை போன்றவற்றை வளர்க்கலாம்.


❓ இஞ்சி சாகுபடி செய்ய ஏற்ற பருவம், மண் மற்றும் ரகங்களைக் கூறவும்?


🌱 ரியோ டி ஜெனிரோ, மாரன் நடன், சுருச்சி, சுபிரபா, சுரவி, ஐஐஎஸ்ஆர், வராதா, ஐஐஎஸ்ஆர் மகிமா, ஐஎஸ்ஆர், ரிஜாதா அதிரா மற்றும் கார்த்திகா ஆகிய இரகங்கள் இஞ்சி சாகுபடிக்கு ஏற்றவை ஆகும்.


🌱 நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல், களிமண் கலந்த குறுமண், சிவப்பு குறுமண் போன்ற நிலங்களில் இஞ்சி நன்கு வளரும்.


🌱 மேலும் மே - ஜூன் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற பருவ காலங்கள் ஆகும்.


❓ தேனீக்களில் என்னென்ன வகைகள் உள்ளது?


🐝 மலைத்தேனீ - இவை சிறந்த தேன் சேகரிக்கும் வகையாகும். மேலும் சராசரியாக, ஒரு காலனிக்கு 50-80 கிலோ தேன் கிடைக்கும்.


🐝 சிறு தேனீ - இவை ஒரு காலனியில், 200 - 900 கிராம் தேனை சேகரிக்கும்.


🐝 இந்திய தேனீ - ஒரு வருடத்தில், தலா ஒரு காலனியில், 6 - 8 கிலோ தேனை சேகரிக்கும்.


🐝 ஐரோப்பா தேனீ - சராசரியாக ஒரு காலனிக்கு 25 - 40 கிலோ தேனை சேகரிக்கும்.


🐝 கொடுக்கற்ற தேனீ - கேரளாவில் காணப்படும் இத்தேனீக்களுக்கு கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது. மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள். இவைகள் ஒரு வருடத்திற்கு, 300 - 400 கிராம் தேனை சேகரிக்கும் தன்மை கொண்டவை.


❓ புறாக்களுக்கு கொடுக்கும் தீவன மேலாண்மையைக் கூறவும்?


🐥 புறாக்களுக்கு பெரிதாக தீவனம் ஏதும் போடத் தேவையில்லை. அவையே வெளியே சென்று இரை தேடிக்கொள்ளும்.


🐥 ஆனால் மழைக்காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றை உணவாக கொடுக்க வேண்டும்.