ஒரு ஆண்டு வரை தானியத்தை பூச்சித்தாக்காமல் பாதுகாக்கும் ஒரே இலை..!

 ❓ செடி வளர்ப்புக்கு எப்பொழுதெல்லாம் உரம் இட வேண்டும்?

🌱 மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து நடவு செய்யும் குழியில் இட வேண்டும்.


🌱 மாதம் ஒரு முறை நுண்ணு}ட்ட சத்துக்களை வேருக்கு அருகே இட்டு தண்ணீர் விட வேண்டும்.


🌱 ஆறாம் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை தொடர்ந்து பாசன நீரில் கலந்து விட வேண்டும்.


🌱 உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம், பொட்டாஷ் பாக்டீரியா மற்றும் ஏயுஆ இவற்றை தொழுஉரத்துடன் கலந்து, மாதம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி பின் வேரில் இடுவதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.


❓ ஆற்று வண்டல் மண்ணில் விளையும் பயிர்கள் என்னென்ன?


🍪 இவ்வகை மண் ஆற்று நீரினால் அடித்து வரப்பட்டு சமவெளிப் பகுதியில் படிவதனால் உருவாகின்றன. கடலோரப் பகுதிகளில் காணப்படும் வண்டல் படிவுகள் மிகவும் மணற்பாங்காகவும், குறைந்த மண் வளத்துடனும் காணப்படும்.


🍪 காவிரிபடுகை வண்டல் மண்ணில் தழை மற்றும் மணிச்சத்து, அங்கக கரிமப்பொருள், தாமிரம், துத்தநாகச்சத்து குறைவாக இருக்கும். நெல், கரும்பு, வாழை போன்ற பாசனப் பயிர்கள் இம்மண்ணில் விளையும்.


❓ ஒருங்கிணைந்த வேளாண்மை என்பது என்ன? 


🍩 பண்ணையில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை சுழற்சி முறையில் பயன்படுத்துதல், வேளாண் பயிர்கள் மட்டுமல்லாது மீன், கோழி, காளான், ஆடு மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் உற்பத்தி செய்வதாகும்.


❓ தானியங்களை பு+ச்சித் தாகுதலில் இருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்?


🐞 அறுவடை செய்து சேமிக்கும் தானியங்களை பு+ச்சிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது கடினமான ஒன்று.


🐞 பல்வேறு பு+ச்சிகள் சேமிப்பு தானியங்களை தாக்குகின்றன. எனவே பாலக்கீரைகளின் காய்ந்த இலைகளை தானியங்கள் சேமிக்கும் கலன்களின் உள்புறத்தில் பரப்பி பின்னர் அதன் மீது நன்கு வெயிலில் உலர்த்திய தானியங்களை இடலாம்.


🐞 இதன் மூலம், இந்த தானியங்கள் ஒரு ஆண்டு வரை எந்த வித பு+ச்சித்தாக்குதலும் இல்லாமல் இருக்கும்.


❓ கோழிகளுக்கு ஏற்படும் ஈரல் அழற்சி நோய்க்கான தீர்வு என்ன?


🐓 கோழித் தீவனத்தில் உள்ள சில நச்சுபொருட்கள் ஈரல் அழற்சியை கோழிகளுக்கு ஏற்படுத்தி, அவற்றின் வளர்ச்சியை பாதிக்கின்றன.


🐓 இந்த நோயை தடுக்க கோழிகளுக்கு மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லியை காய வைத்து, அதை பொடி செய்து கோழித் தீவனத்தில் 10 முதல் 50 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம் அல்லது கீழாநெல்லியை அரைத்து, அதை தண்ணீரில் கலந்து கோழிகளுக்கு கொடுக்கலாம்