உவர்ப்புத் தன்மை உள்ள நிலத்திலும் நெல்லை பயிர் செய்ய டிப்ஸ்..!

 ❓ ஜீவாமிர்தத்தை அதிக மாதங்கள் சேமித்து வைத்து பயிர்களுக்கு பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படுமா?

🍯 ஜீவாமிர்தத்தை மாத கணக்கில் வைத்திருந்து

அதனை பயிர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. ஜீவாமிர்தம் 7 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.


🍯 ஆனால் 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது. ஏனென்றால் கரைசல் வீரியம் இழந்து பயனற்றதாகிவிடும்.


❓ பச்சைப்பயறு செடியில் பு+ச்சியைக் கட்டுப்படுத்த என்ன இயற்கை மருந்து அடிக்கலாம்?


🌱 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம், 3 லிட்டர் கோமியம் கலந்து 1 ஏக்கருக்கு தௌpக்கலாம். மாதம் 2 அல்லது 3 முறை தௌpப்பதன் மூலம் பு+ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.


🌱 அசுவினி, இலைகளை உண்ணும் புழுக்கள் இவை இரண்டும் பச்சைப்பயிரை அதிகமாக தாக்கும் பு+ச்சிகள் ஆகும். இவைகளைக் கட்டுப்படுத்த கற்பு+ர கரைசல் தௌpத்து வந்தால் பு+ச்சி தாக்குதலைத் தவிர்க்கலாம்.


❓ தக்காளி செடிக்கு கருகல் நோய் வருகிறது. அதனை எவ்வாறு தடுப்பது?


🍅 சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ, இஞ்சி 200 கிராம், இவற்றுடன் புதினா அல்லது சவுக்கு இலை 2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.


🍅 ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் 250 கிராம் கலந்து, வேப்பம் புண்ணாக்கு 500 கிராம் கலந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து ஒரு லிட்டர் கரைசலை எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தௌpக்கலாம்.


❓ நிலத்தின் உவர்ப்புத் தன்மையை நீக்கி நெல் பயிரை எவ்வாறு பயிர் செய்யலாம்?


🍩 ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பு+ண்டு விதையை விதைத்து, 40 நாட்கள் கழித்து வளர்ந்துள்ள பசுந்தாள் உரத்தை நிலத்திலேயே மடக்கி உழுது விடலாம்.


🍩 மேலும் தக்கைப்பு+ண்டு விதைக்க முடியாத நிலையில், பசுந்தழை உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இட்டு உழவு செய்ய வேண்டும்.


🍩 சர்க்கரை ஆலைக் கழிவை ஏக்கருக்கு 2 டன் என்ற அளவில் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். இதனை செய்தால் நிலத்தின் உவர் தன்மையை குறைக்கலாம்.


❓ மாடு வளர்ப்பில் நஷ்டம் ஏற்படுவதை எப்படி தடுக்கலாம்?


🐄 பத்து மாடுகளுக்கு, ஒரு நாளைக்கு 2 சென்ட் பரப்பில் உள்ள தீவனப் புல்களைக் கொடுக்க வேண்டும். சுழற்சி முறையில் தீவனப் பயிர்களை அறுவடை செய்ய வேண்டும்.


🐄 சில புல் வகைகள் குறுகியகாலப் பயிர்கள் என்பதால் அவற்றைச் சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம். மாடு வளர்ப்பை நன்றாக தெரிந்துகொண்டு தொழிலில் இறங்கினால், நஷ்டம் வராது