ஆடுகளின் வயிறு உப்புசத்திற்கு.. அவரை இலை மருந்தாகும்..!
❓ நேரடி விதைகளை விதைப்பு செய்ய ஏற்ற பயிர்கள் என்னென்ன?
🍆 காய்கறிகள் : வெண்டை, பீன்ஸ், பட்டாணி, அவரை, மக்காச்சோளம், கொத்தவரை, வெள்ளைப்பு+சணி, தர்பு+சணி, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், நு}ல்கோல், கேரட், வெள்ளரி.
🍆 கீரைகள் : பாலக்கீரை மற்றும் இதர கீரை வகைகள்.
🍆 கிழங்கு வகைகள் : சேனை, பு+ண்டு, மஞ்சள், இஞ்சி, கருணை, உருளைக்கிழங்கு.
❓ விவசாயத்திற்கு ஏற்ற தரமான மண் கொண்டிருக்க வேண்டிய தன்மைகள் என்னென்ன?
🌰 மண்ணானது நல்ல பொலபொலப்பு தன்மையுடன் இருக்க வேண்டும்.
🌰 மண்ணில் உயிரினங்கள் இருக்க வேண்டும். அதாவது மண்புழு, கரையான் போன்ற உயிரினங்கள் அதிக அளவில் மண்ணில் இருக்க வேண்டும்.
🌰 மண்ணில் இருக்கும் உயிரினங்கள், மட்கும் பொருளை சிதைப்பதால் கிடைக்கும் வேதிப்பொருட்கள் இருக்க வேண்டும்.
❓ பச்சைப்பயறு, துவரையை எவ்வாறு செம்மண் கட்டி சேமித்து வைக்க வேண்டும்?
🍪 பச்சைப்பயறு மற்றும் துவரையை சேமித்து வைக்கும்பொழுது, செம்மண் கலவையில் கலந்து சேமித்து வைக்கலாம். ஒரு கிலோகிராம் விதைக்கு ஒரு கிலோகிராம் செம்மண் என்னும் விகிதத்தில் எடுத்து அதில் தண்ணீர் விட்டுக் கரைத்து கூழ்ம நிலையாக்கி விதைகளை நன்றாக படும்படி கைகளினால் கலக்கிய பின்பு சு+ரிய ஒளியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை உலர்த்த வேண்டும். விதைகள் நன்கு உலர்ந்த பின்பு சணல் பைகளில் நிரப்பி சேமித்து வைக்க வேண்டும்.
🍪 இவ்வாறு செய்யப்பட்ட துவரை மற்றும் பச்சைப்பயறு விதைகளில் சுமார் ஓர் ஆண்டு வரை வண்டுகளின் பாதிப்பு ஏற்படுவதில்லை. துவரை மற்றும் பச்சைப்பயறு விதைகளை செம்மண் கட்டி சேமித்து வைக்கும்பொழுது 90 சதம் பு+ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
❓ ஆடுகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசத்தை எவ்வாறு சரி செய்யலாம்?
🐐 ஒவ்வாத பொருட்கள் ஏதேனும் சாப்பிட்டு விட்டால் வயிறு உப்பி ஆட்டுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அது வயிறு உப்புசம் எனப்படும். உரிய நேரத்தில் ஆட்டை கவனிக்காவிட்டால் ஆடுகள் இறந்து வடும்.
🐐 அவரை இலையை அரைத்து நீரில் கலந்து ஆட்டுக்குப் புகட்டினால் வயிற்று உப்புசம் குறையும்.
🐐 குறு மிளகை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து ஆட்டுக்குப் புகட்டினால் அந்நோய் குணமாகும்.
❓ விவசாயமும் கால்நடையும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையது.?
🐄 கால்நடை வளர்ப்பு வேளாண்மையில் ஒரு முக்கியமான அங்கமாகும். எருதுகள் பண்ணையில் பல்வேறு வேலைகளுக்கு உதவுகின்றன.
🐄 வேளாண்மையில் மாடுகளுக்குத் தீவனமும், மாடுகளால் வருடம் முழுவதும் வேலைவாய்ப்பும், நல்ல வருமானமும் கிடைக்கின்றன.
🐄 கால்நடைகள் தின்று கழிக்கும் வைக்கோல் சிறுநீருடன் கலந்து நல்ல உரமாகிறது. ஒரு மாடு ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்திற்குப் போதுமான உரச்சத்துக்களைக் கொடுக்கிறது.