நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் கலப்படம் எப்படி கண்டறிவது தெரியுமா?

 கண்ணாடித் தட்டில் சிறிதளவு கடுகை எடுத்து கொண்டு அதை கண்களால் உற்றுப் நோக்கவும். கடுகு வழவழப்பான மேற்பரப்புடனும் உட்புறம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். கடுகில் பிரம்ம விதைகள்

கலந்திருந்தால் தானியங்கள் போன்ற சொரசொரப்பான மேற்பரப்புடன் கருப்பு நிறத்திலும் இருக்கும் அழுத்தினால் உட்புறம் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.


துருப்பிடிக்காத கரண்டியில் சிறிதளவு பெருங்காயத்தை எடுத்து நெருப்பில் எரிக்கவும். தூய பெருங்காயம் கற்பூரம் ஏற்றுவது போல் பிரகாசமான ஒளியுடன் எரியும், கலப்பட பெருங்காயம் அப்படி எரியாது.


கண்ணாடி குவளையில் நீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். தூய்மையான தேன் நீரில் கலக்காது தேன் நீரில் கலந்தால் அது சர்க்கரை கலப்படம் உள்ளது என்பதை உணரலாம்.


ஆப்பிள் மீது மெழுகு பூசப்பட்டதா என அறிய, ஒரு கத்தியை எடுத்து ஆப்பிள் மேல் மேற்பரப்பை சுரண்டவும், மெழுகு தடவப்பட்டிருந்தால் அது கத்தியில் ஒட்டும்.


தேங்காய் எண்ணெயில் கலப்படம் உள்ளதா என்பதை அறிய ஒளி புகக் கூடிய கண்ணாடி டம்ளரில் தேங்காய் எண்ணை எடுத்துக் கொண்டு அதை குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடங்கள் வைக்கவும். குளிர்பதனம் ஆன பிறகு தேங்காய் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் வேறு எண்ணெய் தனிப்படலமாக தெரியும்.


ஒரு கண்ணாடி குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அந்த நீரின் மேற்பரப்பின் மீது கோதுமை மாவை தூவுங்கள். நீர் பரப்பின் மீது அதிகமான தவிடு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதிகமாக தவிடு கலப்படம் செய்துள்ளதாக அறியலாம்.